உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவில் வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா திட்டவட்டம்

விரைவில் வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், வங்க தேசத்தை பயங்கரவாத நாடாக மாற்றிவிட்டார். விரைவில் நாடு திரும்புவேன்' என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சபதம் விடுத்துள்ளார்.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியை கைப்பற்றியது. இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=if5xlite&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: அல்லா என்னை ஒரு காரணத்திற்காகவே உயிருடன் வைத்திருந்தான், நீதி நிலைநாட்டப்படும்.இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், வங்க தேசத்தை பயங்கரவாத நாடாக மாற்றிவிட்டார். எனது கட்சி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் நாடு திரும்புவேன்.வங்கதேச மக்களை ஒருபோதும் நேசிக்காத முகமது யூனுஸ் அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகைகளை கடன் வாங்கி, அந்தப் பணத்தை வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழ பயன்படுத்தினார். அப்போது அவரது போலித்தனத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் நாங்கள் அவருக்கு நிறைய உதவினோம். அவர் அதிகார மோகத்தை வளர்த்துக் கொண்டார், அது இப்போது வங்கதேசத்தை எரிக்கிறது.எங்கள் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கொல்லப்படுகிறார்கள். போலீசார், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள். நான் என் தந்தை, அல்லா என்னைப் பாதுகாத்துக்கொண்டே இருக்கலாம், ஒருவேளை அவர் என் மூலம் ஏதாவது நல்லது செய்ய விரும்பலாம். குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது எனது உறுதிமொழி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மீனவ நண்பன்
ஏப் 08, 2025 22:21

கெளம்பற அவசரத்தில் ரெண்டு சூட்கேஸ் விட்டு போயிருக்கும் ..


மோடி தாசன்
ஏப் 08, 2025 20:54

நம்ம மோடி ஜி இப்பத்தான் இடைக்கால அதிபர் யுனுஸை பார்த்து பேசிட்டு வந்தார். உடனே முதல் முறையாக அம்மா பேசுகிறார்கள். அது தான் மோடிஜி பவர்


c.mohanraj raj
ஏப் 08, 2025 20:47

வங்கதேசம் போனால் உலகத்தை விட்டு போய் விடுவீங்க


தாமரை மலர்கிறது
ஏப் 08, 2025 18:59

தனது கட்சியை சார்ந்த சுதந்திரபோராட்ட தியாகிக்குடும்ப வாரிசுகளுக்கு முப்பது சதவீத இடஒதுக்கீடு கொடுப்பேன் என்று நீ போட்ட ஆட்டத்தால் தான், நல்லாட்சி கொடுத்ததும் இந்தியாவிற்கு ஓடிவரவேண்டிய அவசியம் ஆயிற்று. இப்போது திரும்ப பங்களாதேஷிற்கு சென்றால், ராணுவம் சும்மாவிடாது. அவர்கள் பங்களாதேஷ் மக்களின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பங்களாதேஷிற்கு இனி சுதந்திரம் நிரந்தரமாக கிடையாது. பாகிஸ்தான் கதை தான் இனி பங்களாதேஷ் மக்களுக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை