உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் மாநிலத்தில் மாந்த்ரீகத்தில் ஈடுபட்டதாக கூறி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.பீஹார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சதர் பூர்ணியா பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி பங்கஜ் குமார் சர்மா கூறியதாவது:இன்று அதிகாலை 5 மணிக்கு சோனுகுமார், 16, என்ற சிறுவன் தன் குடும்பத்தினரை கிராம மக்கள் தாக்கி, உயிரோடு எரித்துக் கொன்று விட்டதாக கூறினான்.நாங்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். இதில், பாபுலால் ஓரோன், சீதா தேவி, மஞ்சித் ஓரோன், அரணியா தேவி, காக்தோ ஆகிய 5 பேரின் எரிந்த உடல்கள் மீட்கப்பட்டன.இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதே கிராமத்தை சேர்ந்த ராம்தேவ் ஓரோன் என்பவரின் குழந்தை மூன்று நாட்களுக்கு முன் இறந்து விட்டது.இதற்கு, குறிப்பிட்ட இந்த 5 பேர் குடும்பத்தினர் செய்த மாந்திரீகம் தான் காரணம் என்று கருதி, எரித்து கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூலை 08, 2025 09:15

மூடநம்பிக்கை என்றாலே சம்பந்தப்பட்ட நபர்கள் சங்கிகளாகத் தான் இருப்பார்கள்!


SANKAR
ஜூலை 07, 2025 21:30

thituttu dravida aatchiye kaaranam!makkalukku paadhukaapillatha kolaigaara aatchi


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 21:25

படித்த கேரளாவிலும் 3 ஆண்டுகளுக்கு முன் நரபலிகள் நடந்தன. செய்தது சிறுபான்மை ஆட்கள் என்பதால் அரசு அடக்கி வாசித்தது. என்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை