உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாடகைதாரர்கள் சொத்துரிமை கோருவதா? முக்கிய தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்

வாடகைதாரர்கள் சொத்துரிமை கோருவதா? முக்கிய தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'பல ஆண்டுகளாக தங்கி இருந்தாலும், வாடகை சொத்து மீது வாடகைதாரர்கள் உரிமை கொண்டாட முடியாது' என, மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. டில்லியை சேர்ந்த ஜோதி சர்மா என்பவரின் மாமனார் ராம்ஜி தாஸ், தனக்கு சொந்தமான கடையை, 1953ல் வாடகைக்கு விட்டார். அவர் மறைந்த பின், அந்த சொத்து மருமகள் ஜோதி சர்மா பெயருக்கு மாறியது. இதையடுத்து, இனிப்பு மற்றும் பலகாரங்கள் விற்கும் தொழிலை விரிவுப்படுத்த கடையை காலி செய்யும்படி வாடகைதாரரை ஜோதி கேட்டுள்ளார். இதற்கு வாடகைதாரர் விஷ்ணு கோயல் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ராம்ஜி தாஸ் மருமகள் பெயரில் எழுதிய உயில் போலியானது என குற்றஞ்சாட்டினார். தவிர, 30 ஆண்டுகளாக அந்த கடையை நடத்தி வருவதாகவும், 1980ல் வாடகை தருவதை நிறுத்திய பிறகும், நில உரிமையாளர் தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அனுபவத்தில் அந்த சொத்து உரிமை தனக்கே சேரும் எனவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த, 1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம். அந்த சட்டத்தின் அடிப்படையில், டில்லி உயர் நீதிமன்றம் விஷ்ணு கோயலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.இதனால் மனம் உடைந்த ஜோதி சர்மா, உச்ச நீதிமன்றத்தை நாடினார். இருதரப்பு வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வினோத் சந்திரன் அமர்வு அளித்த தீர்ப்பின் விபரம்:வாடகை என்பது நில உரிமையாளரின் அனுமதியின் பேரில் விடப்படுவது. நில உரிமையாளரின் ஒப்பதலுடன் தான் வாடகைதாரர் அந்த இடத்தை பயன்படுத்துகிறார். அதனால், அதை ஆக்கிரமிப்பு என வகைப்படுத்த முடியாது. மேலும், ஆண்டு கணக்கில் வாடகை இடத்தில் வசிப்பதால் மட்டும், வாடகைதாரர் அந்த சொத்தின் உரிமையாளராக மாறிவிட முடியாது. இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றங்கள் எடுத்த முடிவுகள் தவறானவை. ஆதாரங்களுடன் ஒத்துப் போகவில்லை. 1953ல் ராம்ஜி தாசுடன் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, வாடகைதாரர்கள், தொடர்ந்து அவருக்கும், அவரது வாரிசுகளுக்கும் வாடகை செலுத்தி வந்துள்ளனர். இதன் மூலம், உரிமையாளர் - வாடகைதாரர் என்ற உறவு இருந்தது உறுதியாகியுள்ளது. வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டாலே, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் உரிமைகளுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவோ, எதிர்க்கவோ முடியாது. அந்த வகையில், சம்பந்தப்பட்ட உயில் உண்மையானது தானா என சந்தேகம் எழுப்புவதற்கான முகாந்திரம் வாடகைதாரருக்கு கிடையாது. நீண்ட காலமாக வாடகை செலுத்தி வந்ததை கருத்தில் கொண்டு, வாடகைதாரர், கடையை காலி செய்ய ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படுகிறது. அதற்குள், நிலுவையில் உள்ள வாடகை பணத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
நவ 13, 2025 00:02

ஆட்டையபோட்டவனுக்கே உரிமை என்று நல்லவேளையாக தீர்ப்பு கூறவில்லை. இதெல்லாம் ஒரு உரிமை என்று கோரும்போதே, வாடகைக்காரரை அடித்துவிரட்டி இருக்க வேண்டும்.


Raj
நவ 12, 2025 23:30

சபாஷ் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது. இனி வாடகை agreement எழுதும் பொழுது இட உரிமையாலரின் இடத்திற்கு இவ்வளவு வாடகை செலுத்துகிறேன், இதை எந்த தருணத்திலும் நான் சொத்துரிமை கோரமாட்டேன் என்ற வரியையும் குறிப்பிட வேண்டும். நீதிமன்றம் கூறியது சரியே “ஆக்கிரமிப்பு“ அல்ல “வாடகை”.


Ram pollachi
நவ 12, 2025 23:27

கடைவீதி, டவுன்ஹால் போன்ற பகுதிகளில் இருக்கும் பல கடைகளின் வாடகை பணத்தை கோர்ட்டில் கட்டிவிடுவார்கள் இரண்டு மூன்று தலைமுறையாக இது நடைபெறுகிறது.... இந்த மாதிரி தீர்ப்பை எங்கள் ஊர் கிழக்கு காவல் போலீஸ் தீர்ந்து வைத்ததை நான் பார்த்திருக்கிறேன்


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 23:23

அந்த கோயல் போன்றோரை ஒரு ஆறு மாதமா உள்ளே வையுங்களேன் ப்ளீஸ்


Sun
நவ 12, 2025 23:12

அடுத்தவர் மனம் புண்படும் படியான கிண்டல் கேலியுடன் கூடிய தங்களது தனிப்பட்ட கருத்துக்களை வழக்கு விசாரணையின் போது எதுவும் கூறாமல் மிக நல்ல தீர்ப்பை உச்ச நீதி மன்றத்தின் இந்த பெஞ்ச் வழங்கியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்த பெஞ்ச் வழங்கிய இன்றைய தீர்ப்பு சாதாரண மக்கள் நீதி மன்றங்களின் மேல் இன்றும் வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிப்பதாக உள்ளது.


SS
நவ 12, 2025 23:12

நியாமான தீர்ப்பு. பாராட்டுகள்


N Annamalai
நவ 12, 2025 22:53

அருமை .பாராட்டுகள்


GMM
நவ 12, 2025 22:52

1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை வீட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம் என்ற சட்டம் வன்முறை, ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும். இதனை ரத்து செய்ய வேண்டும். பிழைக்க சொந்த ஊர் விட்டு வெளியூரில் தனி நபர் வாடகை வீட்டில் தங்குவர். ஊர் திரும்ப பல வருடங்கள் ஆகிறது. வீட்டை வாடகைக்கு விட்டால், ஆக்கிரமிக்க சட்டம் போட்டது யார்? தனி நபர் யாரும் அரசு போல் கடிதங்கள், ஆவணங்கள் பராமரிக்க முடியாது. நிலம் கிரயம் என்றால் மட்டும் உரிமை. மற்றவை தள்ளுபடி செய்ய வேண்டும்.


nagendhiran
நவ 12, 2025 22:45

பேராசை பட்டவனுக்கு செருப்படி?


இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 12, 2025 22:34

அருமையான தீர்ப்பு


புதிய வீடியோ