உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரேயாஸூக்கு கேப்டன் பொறுப்பு... ஆஸி., ஏ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஸ்ரேயாஸூக்கு கேப்டன் பொறுப்பு... ஆஸி., ஏ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த மாதம் செப்., 16ம் தேதி முதல் போட்டியும், செப்., 23ம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் தொடங்குகிறது. இரு போட்டிகளுமே லக்னோவில் நடக்கின்றன. இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸை தேர்வு செய்யாததற்கு பிசிசிஐ கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது அவரை ஆஸி., தொடருக்கு கேப்டனாக நியமித்துள்ளது. இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் , சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய ஏ அணி வீரர்களின் முழு விபரம்ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)அபிமன்யு ஈஸ்வரன்ஜெகதீசன் சாய் சுதர்சன்துருவ் ஜூரேல்தேவ்தட் படிக்கல்ஹர்ஷ் துபேஆயுஷ் பதோனிநிதிஷ் குமார் ரெட்டிதனுஷ் கோட்டியான்பிரசித் கிருஷ்ணாகுர்னூர் ப்ரார்கலீல் அகமதுமானவ் சுதர்யாஷ் தாக்கூர்ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.ராகுலும், முகமது சிராஜூம் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி