உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு

இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அணியில் தமிழக வீரர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (லீட்ஸ்), ஜூன் 20ல் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.டெஸ்டில் இருந்து அனுபவ ரோகித், கோலி ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணி மாற்றத்தை நோக்கி நகர்ந்தது. இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விபரம் பின்வருமாறு:சுப்மன் கில் (கேப்டன்), ரிஷாப் பன்ட்ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன் (தமிழக வீரர்)கருண் நாயர், நிதிஷ் குமார்,ரவிந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர் (தமிழக வீரர்)ஷர்துல் தாகூர்பும்ராசிராஜ், பிரசித் கிருஷ்ணாஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்,குல்தீப் யாதவ்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yasararafath
மே 25, 2025 16:14

வாழ்த்துகள் சாய்சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர்


Sankar
மே 24, 2025 20:34

சுதர்ஷன் அண்ட் வாஷிங்டன் சுந்தர் வெற்றி பெற வாழ்துக்கள்


Vasan
மே 24, 2025 19:27

Best wishes to Sai Sudharshan. Let us hope that he is inducted into playing XI.


sridhar
மே 24, 2025 18:36

கவாஸ்கர் , கபில் தேவ் , சோல்கர் போன்றவர்களை தேர்ந்தெடுக்காதது வருத்தம் அளிக்கிறது .


GUNA SEKARAN
மே 24, 2025 18:07

ரோஹித் சர்மா போன்றவர்கள் எல்லாம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளுக்கு தகுதியானவர்கள் இல்லை. ஆனால் ...... அரசியல். .....அணித் தலைவர் ?????


ஆரூர் ரங்
மே 24, 2025 17:11

நாட்டு ஏழைகளுக்கு முக்கியமான செய்தி.


உண்மை கசக்கும்
மே 24, 2025 16:59

அபிமன்யு ஈஸ்வரன் தமிழர் தானே. அவரை விட்டு விட்டீர்கள்.


Nada Rajan
மே 24, 2025 16:43

அணியை சிறப்பாக வழிநடத்த கில்லுக்கு வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ