உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா கோரிக்கை: அசிம் பிரேம்ஜி நிராகரிப்பு 

சித்தராமையா கோரிக்கை: அசிம் பிரேம்ஜி நிராகரிப்பு 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'விப்ரோ' நிறுவன வளாகம் வழியாக, வாகனங்கள் செல்ல அனுமதி கேட்ட கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையாவின் கோரிக்கையை, அசிம் பிரேம்ஜி நிராகரித்து விட்டார். பெங்களூரு நகரின் வெளிவட்ட சாலையில், இப்பலுார் சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'விப்ரோ' வளாகம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கேட்டு, 'விப்ரோ' நிறுவனர் அசிம் பிரேம்ஜிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளித்து, முதல்வருக்கு அசிம் பிரேம்ஜி அனுப்பியுள்ள கடிதம்: எங்கள் நிறுவன வளாகம் வழியாக, வாகனங்களை அனுமதிக்க நீங்கள் கோரிக்கை விடுத்து உள்ளீர்கள். ஆனால், எங்கள் வளாகத்திற்குள் செல்லும் சாலை, பொது பயன்பாட்டிற்கானது இல்லை. வரையறுக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்பாட்டில் உள்ளது. எங்கள் வளாகம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் சிறப்பு பொருளாதார மண்டலமாகவும் உள்ளது. இதனால், தனியார் சொத்து வழியாக பொது வாகன பயன்பாட்டை அனுமதிப்பது, நீண்ட கால, நிலையான தீர்வாக இருக்காது. இருப்பினும் போக்குவரத்து சவால் களுக்கு தீர்வு காண, கர்நாடக அரசுடன் கூட்டு சேர நாங்கள் உறுதி பூண்டு உள்ளோம். கூட்டு சார்ந்த அணுகுமுறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறோம். போக்குவரத்து பிரச்னைக்கு அறிவியல் ஆய்வுகள் மூலம், நீண்டகால திட்டத்தை வகுப்பது அவசியம். ரேஷ்மி சங்கர் தலைமையிலான எங்கள் குழுவினர், அரசு அதிகாரிகளுடன் விரைவில் விவாதிப்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

திகழ்ஓவியன்
செப் 26, 2025 12:01

இப்படி தான் TVS வில்லிவாக்கம் பாடியில் பாலம் கட்டும்போது இடைஞ்சல் , கலைஞர் பேசி ஒரே நாளில் இடம் கொடுத்தது TVS இது தான் ஆளுமை


Rangarajan Cv
செப் 26, 2025 12:48

WIPRO campus is SEZ d by the set of regulations


Sun
செப் 26, 2025 11:44

சரியாகத்தான் மறுத்திருக்கிறார் ஆசிஸ் பிரேம்ஜி. நாளை அந்த இடமே எங்களுக் தான் சொந்தம் என கொடி பிடித்து போராட கிளம்பி விடும் பல கும்பல்கள். போக்குவரத்து வழியை எல்லாம் சரி செய்ய வேண்டியது அரசின் பணி.


ஆரூர் ரங்
செப் 26, 2025 10:37

சிறுபான்மையினர் நிறுவனங்களுக்குக் கூட தொல்லை. இது எப்போ துவங்கியது?


ram
செப் 26, 2025 11:36

காங்கிரஸ் கட்சியெ ஒரு முஸ்லீம் கட்சிதானே


kamal 00
செப் 26, 2025 08:20

நம்ம சிறுத்தை குட்டி கும்பல் டெண்ட் போட்டு பட்டறையை போட்ருவானுக.,. அப்புறம் மங்கி கூட சேர்ந்து ஆட்டைய போட்ருவானுக


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2025 08:12

மைசூரு மகாராஜாவின் இடத்தை ஆட்டைய போட்டமாதிரி பிரேம்ஜியின் இடத்திற்கு முடியாது சித்தம்கலங்கிப்போனவனே


மாபாதகன்
செப் 26, 2025 12:08

சித்தம் கலங்கி போன சீதா ராமையா...?? இதையேதான் அந்த வைரமுத்து டெயிலரும் சொன்னார்...


Barakat Ali
செப் 26, 2025 07:22

போக்குவரத்து குறித்த எதிர்காலக் கணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையிலான நகரத் திட்டமிடல் அரசுகளின் பொறுப்பு ......... கடமையில் தவறிய அரசுகள் தனியார் நிறுவனத்திடம் இடம் கேட்பதே வெட்கக்கேடு ....... அசிம் பிரேம்ஜி நியாயமாகவும், நாகரீகமாகவும் பதில் கொடுத்துள்ளார் .....


N Annamalai
செப் 26, 2025 06:59

உடன் பதில் சொன்னதற்கு நன்றி .ஜவ்வு மாதிரி இழுக்காமல் .நடைமுறை பதில் .பாராட்டுகள் சார் .


Moorthy
செப் 26, 2025 06:37

விப்ரோ வுடன் மோத வேண்டாம் என்று ராகுல் கூறி விடுவார்


தியாகு
செப் 26, 2025 06:05

நல்லவேளை விப்ரோ நிறுவனம் கர்நாடகாவில் இருக்கிறது. இதுவே டுமிழ்நாட்டில் இருந்திருந்தால் அந்த கம்பெனியின் ஐம்பது சதவீத பங்கை கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கு எழுதி தர மிரட்டியிருப்பார்கள்.


Kasimani Baskaran
செப் 26, 2025 03:50

அனுதினமும் எப்படி சம்பாபதிப்பது என்ற எண்ணத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பது கிடையாது. புதிதாக பிரச்சினைகளை உருவாக்காமல் இருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை