உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் !

கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் !

இந்தூர்: எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மபியில் 42 லட்சம், கேரளாவில் 22 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.தமிழகம்,கேரளா, மேற்கு வங்கம், மபி உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது, முகாம் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்திலும் எஸ்ஐஆர் பணியைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு முன்பு 5,74,06,143 வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த 5,31,31,983 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 42,74,160 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் 19.19 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 23.64 லட்சம் பேர் பெண்கள்.நீக்கப்பட்டவர்களில் இடம்மாறியவர்கள்:31.51 லட்சம்இறந்தவர்கள்: 8.46 லட்சம்இரட்டை பதிவுகள்: 2.77 லட்சம் என மபி மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

கேரளா

கேரளாவில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 2,54,42,352 வாக்காளர்கள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.நீக்கப்பட்ட 22 லட்சம் பேரில்இறந்தவர்கள்: 6,49,885 பேர்இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 14,61,769இரட்டை பதிவுகள்: 1,36,029 என தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரில்

சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர்.விநியோகம் யெ்யப்பட்டதில் 1,84,95,920 விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நீக்கப்பட்ட 27 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,42,234 பேர்இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 1,79,043 பேர்இரட்டை பதிவுகள்: 1,79,043


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ