உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறுகளை பரப்பாதீர்கள்: வம்பு இழுத்த கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

அவதூறுகளை பரப்பாதீர்கள்: வம்பு இழுத்த கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிஜ்ஜார் கொலை குறித்த கனடா ஊடக அறிக்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அவதூறு பிரசாரங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சேதப்படுத்தும் என இந்தியா எச்சரித்துள்ளது.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pwcpyt1e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தானியர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.இந்த சூழலில்,ஹர்தீப் சிங் நிஜாரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுவது, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும் என கனடா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாங்கள் பொதுவாக மீடியா அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லாமல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும். இது போன்ற அவதூறு பிரசாரங்கள் ஏற்கனவே சிதைந்திருக்கும் இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
நவ 21, 2024 20:26

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இந்தியா காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆம் அவர்கள் தாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதேதோ செய்கின்றனர். மொத்தத்தில் இருவருக்கும் மூளை சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சினை. பாவம். அவர்கள் இருவரும் சீக்கிரம் பூரண குணமடையவேண்டும்.


G Sundar
நவ 21, 2024 16:48

எங்கள் பாரதப்பிரமரை துவேசிக்கும் கனடா ஒழிக


SIVAN
நவ 21, 2024 14:04

இன்னும் வரும்


Anand
நவ 21, 2024 10:26

காலிஸ்தானியர்களால் தான் ஜஸ்டின் ட்ரூடோ அழிவான் என்ற விதி இருந்தால் அதை யாரால் தடுக்க முடியும்?


Barakat Ali
நவ 21, 2024 10:06

கனடா இனி இந்திய மாணவர்களுக்கான டெஸ்டினேஷன் அல்ல .........


N.Purushothaman
நவ 21, 2024 09:54

ஆட்டை கடித்து மாட்டை கடித்தது போல இப்போது பாரத பிரதமரையே இதில் உள்ளே இழுக்க வேண்டிய அவசியம் என்ன ? திருட்டு பயலுவோ ...


sankaranarayanan
நவ 21, 2024 08:56

அவன் பெயர் ட்றுடோ அல்ல அவன் பெயர் பால்ஸ்டோ - பொய்யன்


RAJ
நவ 21, 2024 08:10

கட்டதுறைக்கு கட்டம் சரி இல்லை. வம்பு இலுக்கர்தே வேலைய போச்சு... இவனை எல்லாம் அடிச்சு விரட்டணும் .. ..


S.Murali
நவ 21, 2024 08:01

CANADA PRIME MINISTER IS A CRACK POT CAN TAKE THE ISSUE AT UN AND SHUT THEM OFF IF NEED BE CAN TAKE MILATARY ACTION


புதிய வீடியோ