உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரச்னைகளுக்கு தீர்வு!

பிரச்னைகளுக்கு தீர்வு!

உலக நாடுகள், தங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக இந்தியாவை நோக்கி வருகின்றன. அவர்களின் கவனம், நம் இளைஞர்கள் மீது தான்; அதுவே, நம் மிகப்பெரிய பலம். இளைஞர்களின் திறன், நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வழிவகுக்கிறது. உலகளவில் சவால்களை சமாளிக்க, அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். - ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகர்

சர்க்கஸ் நடத்துகின்றனரா?

என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகத்தில் நீதித்துறை மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பா.ஜ., அரசு சுமத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற ஆட்சேபனைக்குப்பின் நிரபராதி போல் செயல்படுகின்றனர். இக்குற்றத்தை யார் செய்தனர் என்று கூட தெரியாது எனவும் கூறுகின்றனர். அவர்கள் ஆட்சி செய்கிறார்களா? அல்லது சர்க்கஸ் நடத்துகின்றனரா? - அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

நீதி வென்றது!

மதுபான கொள்கை வழக்கால் டில்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு வீழ்த்தப்பட்டது. தெலுங்கானாவில் சட்டசபை, லோக்சபா தேர்தல்களி ல் பாரத் ராஷ்டிர சமிதி யின் வெற்றி பாதித்தது. இறுதியில் நீதி வென்றது. எங்கள் கட்சியினர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் ஆனது; அரசியல் ரீதி யாக துாண்டப்பட்டவை. - கே.டி.ராமா ராவ், செயல் தலைவர், பாரத் ராஷ்டிர சமிதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை