உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை; மன்னர் ஆக்க விரும்புகிறார்; லாலுவை விளாசிய பிரசாந்த் கிஷோர்

மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை; மன்னர் ஆக்க விரும்புகிறார்; லாலுவை விளாசிய பிரசாந்த் கிஷோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை. பீஹாரின் மன்னர் ஆக்க லாலு பிரசாத் விரும்புகிறார்' என தேர்தல் பிரசாரத்தில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.பீஹாரின் ஜலேவில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். அதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் லாலு பிரசாத்திடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை. பீஹாரின் அரசராக்க லாலு பிரசாத் விரும்புகிறார். நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளைப் பார்க்க வேண்டும். அவர்கள் நன்கு படித்து உள்ளார்கள். அவர்களுக்கு இன்னும் பியூன் வேலை கூட கிடைக்க வில்லை. மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் மக்கள் ஓட்டளிக்க கூடாது.

பணம் வாங்கிக்கோங்க!

தேர்தலின் போது தலைவர்கள் வந்து உங்களுக்கு பணம் கொடுப்பார்கள். அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்? கடந்த ஐந்து ஆண்டுகளில், உங்கள் ரேஷன் கார்டு மற்றும் நிலப் பதிவைப் பெற லஞ்சம் கேட்கப்பட்டதா இல்லையா? அவர்கள் உங்களிடமிருந்து ஐந்து ஆண்டுகளாக பணத்தை கொள்ளை அடித்து விட்டு, இப்போது ரூ.1500-2000 கொடுக்கிறார்கள், அதைத் திரும்பப் பெறுங்கள். அது உங்கள் பணம். ஆனால் உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஓட்டளிக்க வேண்டும். இது அதிகாரத்திற்கான போராட்டம். தலைவர்களுக்கு நாற்காலி கிடைக்கும்போது, ​​அவர்கள் அதை மக்களுக்காக பயன்படுத்துவதில்லை. நான் உரைகள் ஆற்றுவதில்லை. ஓட்டு கேட்பதில்லை.

20 ஆண்டுகள்

பீஹாரில் லாலு பிரசாத் யாதவ் 15-20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் நிதிஷ் குமார் ஆட்சி செய்தார். இப்போது நீங்கள் டில்லியில் பிரதமர் மோடிக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள். நீங்கள் எனக்கு ஓட்டு அளித்தால், நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால்தான் நான் ஓட்டு கேட்கவில்லை. ஆனால், 15-20 நிமிடங்களுக்குள் உங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு தீர்வை நான் உங்களுக்கு வழங்குவேன். அப்படி நடக்கவில்லை என்றால் நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதைப் பின்பற்றி, நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளியுங்கள். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

rama adhavan
செப் 20, 2025 23:30

5 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வேலை பார்த்து தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி செய்ததையும் சொல்லி பிஹாரில் ஓட்டு கேளுங்கள், ஓட்டு விழுகிறதா என்று பார்க்கலாம்.


V K
செப் 20, 2025 21:28

கிஷோர் ஐந்து வருஷம் முன்னாடி அவன் கிட்ட தான் வேலை பார்த்தாய் ஐந்து வருஷம் முன்னாடி இந்த செய்தி உனக்கு தெரியவில்லையா


HoneyBee
செப் 20, 2025 21:15

அப்ப ₹300 கோடி வாங்கிட்டு தமிழ் நாட்டில் என்ன செய்தீக.. உங்களால தான் இப்ப இந்த துண்டு சீட்டு பிரச்சினை


hariharan
செப் 20, 2025 19:46

எழுதிக்கொடுத்ததை படிக்கும் அளவிற்கு தெரிந்தால்போதும் என்று நிரூபித்த மாநிலம் எங்கள் மாநிலம்.


Vasan
செப் 20, 2025 19:25

This man Shri. Prashanth Kishore is fluke. It was the anti incumbency that was prevailing, which made the parties to win.


D.Ambujavalli
செப் 20, 2025 18:32

9 ஆம் வகுப்புத் தாண்டவில்லை என்றா இவர் கவலைப்படுகிறார்? நம் தமிழகத்துக்கு வந்தவர்தான் 5 ஆம் வகுப்பு தாண்டாதவர்களுக்காக பிரசார பீரங்கியாக இருந்து வெற்றிபெற வைத்தது மறந்துவிட்டதா ?அப்போது 350 C பேசியது போலிருக்கிறது தனிக்கட்சி ஆரம்பித்த பிறகுதான் இந்த ‘கல்வித்தகுதி’ ஞானோதயம் வந்ததா?


KOVAIKARAN
செப் 20, 2025 18:30

இந்த பிரஷாந்த் குமார் ஒரு அரசியல் தீவிரவாதி. யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஏதாவது கிரிமினல் வேலை செய்து அவர்களை ஜெயிக்க வைத்துவிடுவார். முதன்முதலில் பெரிய வெற்றியை 2014ல் பிஜேபிக்கு தேடிக்கொடுத்தார். அப்போது அவர் நேர்மையான செயல்களையே செய்துவந்தார். ஆனால், திமுக அவருக்கு பணத்தாசை காட்டி, அவர்கள் வலையில்விழுந்து, தமிழ்நாடு மோசமாக போவதற்கு வழி வகுத்தார். அதன்பின் பண ஆசை அவருக்கு அதிகரித்து, பல கட்சிகளுக்கு பணி புரிந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. அதனால், அவர் வேறு எங்கும் வண்டியை ஓட்ட முடியவில்லை. எனவே, தாய் மாநிலமான பிஹாரில் அரசியல் செய்கிறார். விதி யாரை விட்டது? குறுக்கு வழியில் சேர்த்த பணத்தை தொலைக்கவேண்டுமென்பது அவரது விதி போலும்.


Anonymous
செப் 20, 2025 22:14

சார், ஒரு திருத்தம், அரசியல் தீவிரவாதி இல்லை, அரசியல் தீவிர வியாதி. தமிழ்நாட்டுக்கு இவர் வச்சு செஞ்சது , தமிழ் மக்கள் காலத்துக்கும் மறக்க மாட்டார்கள் சாமி..........


vbs manian
செப் 20, 2025 18:12

சார் இங்கேயும் அதே கதைதான்.


Nathansamwi
செப் 20, 2025 17:40

25 வருட ஆட்சிக்கு முடிவு கட்டுங்க PK....


V Venkatachalam
செப் 20, 2025 17:30

பி கே அவர்களே 350 கோடிக்கு ஆசைப் பட்டு எங்க டமில் நாட்டை நாசம் பண்ணிட்டு இப்போ என்ன பேச்சு வேண்டிகிடக்கு? நல்ல வேளை உங்களுக்கு முன்னாடி ஜார்ஜ் சோரோஸ் கிட்ட ராகுல் கான் அஸைன்மெண்டை வாங்கிப்புட்டாரு. அப்புடி இல்லாம அது உங்க கிட்ட வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்ன்னு நினைச்சு பாக்கவே குலை நடுங்குகிறது. பயங்கர வாதி லிஸ்டில் நீங்க இல்லாட்டாலும் எங்களை பொறுத்தவரை நீங்க பயங்கரவாதி தான். முடிந்தால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். உங்களால் அரியாசனத்தில் உட்கார்ந்து கொண்டு டமில் நாட்டையே தினம் தினம் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த களவாணிகளை கீழே இறக்கி டமில் நாட்டை காப்பாத்தி குடுங்க.