உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகன் திருமணத்தால் மகிழ்ச்சி: ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்கும் அதானி

மகன் திருமணத்தால் மகிழ்ச்சி: ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்கும் அதானி

புதுடில்லி: பிரபல தொழிலதிபர் அதானியின் மகன் ஜீத் அதானியின் திருமணம் இன்று நடந்தது. இதனை முன்னிட்டு சமூக சேவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக அதானி அறிவித்து உள்ளார்.இந்தியாவின் 2வது கோடீஸ்வரரான பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி. இவரது இளைய மகன் ஜீத் அதானி. இவருக்கும் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஜெயின்ஷாவின் மகள் திவாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.திருமண சடங்குகள் ஆமதாபாத்தில் உள்ள சாந்திகிராம் நகரில் கடந்த 5ம் தேதி துவங்கியது. ஹிந்து மற்றும் ஜெயின் முறைப்படி சடங்குகள் நடந்தன. இன்று மாலை இருவரின் திருமணம் நடந்தது. இதில், அதானியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.திருமணம் தொடர்பாக அதானி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடவுளின் ஆசிர்வாதத்தால் ஜீத் மற்றும் திவாவின் திருமணம் இன்று நடந்தது. ஆமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்நிகழ்ச்சி சிறிய மற்றும் தனிப்பட்ட முறையில் நடந்ததால், நலன் விரும்பிகளை அழைக்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரிடம் இருந்தும் ஜீத் மற்றும் திவாவிற்கு அன்பையும், ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அதானி கூறியுள்ளார்.

நன்கொடை

மேலும் மகனின் திருமணத்தை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில், தரமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகள் நிறுவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த திருமணத்திற்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண்கள் 21 பேருக்கு அதானி சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் கலந்து கொண்ட ஜீத் அதானி, ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Krishnamurthy Venkatesan
பிப் 13, 2025 15:20

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மாற்று திறனாளி பெண்களின் திருமணத்தை எளிமையாக எந்தக் குறையும் இல்லாமல் நடத்தி, மீதி பணத்தை அவர்களின் பெயரில் டெபாசிட் செய்தால் அவர்களின் வருங்காலத்திற்கு உபயோகமாக இருக்கும்.


பாரதி
பிப் 08, 2025 21:31

அது சரி இதனை கிண்டல் செய்பவர்கள் அதானி கொள்ளை அடித்தவர் என்று சொல்பவர்கள் கொள்ளையடிக்காத உத்தமபுத்திரர்கள் நீங்கள் அதிகமாக சம்பாதித்து கொடுக்கலாமே அவர் கொள்ளை அடித்ததை நீங்கள் தான் பார்த்தீர்களா நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வாங்க சம்பளம் வாங்காமல் வேலை செய்யுங்க அவரு சம்பாதிச்சா மட்டும் தப்பா அவர் செய்த தொழிலை நீங்க செய்யுங்க, லாபம் சம்பாதிக்காமல் விநியோகம் பண்ணுங்க யாரு தடுத்தா...


தமிழ் சிந்தனை
பிப் 08, 2025 21:28

இது என்ன... நம்ம ஆந்திர திராவிடர் 10 லட்சம் கோடி கொடுப்பார் சீக்கிரம், அப்ப பாருங்க....


தாமரை மலர்கிறது
பிப் 08, 2025 02:05

அதானி சிறந்த தேசப்பற்றாளர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கொண்டவர். பொன்மனச்செம்மல். விரைவில் உலக முதல் பணக்காரர் ஆக வாழ்த்துக்கள்.


Senthoora
பிப் 08, 2025 01:59

அதானி மக்களிடம் கொள்ளை லாபம் அடித்ததை, மக்களுக்கு கொடுக்கிறார் அவ்வளவுதான்.


Nandakumar Naidu.
பிப் 08, 2025 03:21

கொடுக்க மனம் வேண்டும். அதை பாராட்ட வக்கில்லாத ஜென்மங்கள். சன் குழுமம் மறந்து கூட எச்சில் கையால் காக்கா, குருவிகளை கூட விரட்ட மாட்டார்கள்.


N Sasikumar Yadhav
பிப் 08, 2025 06:14

அப்படி மக்களிடம் விஞ்ஞானரீதியாக கொள்ளையடித்த உங்க எஜமான் கோபாலபுர குடும்பம் மக்களுக்கு கொடுக்க மனம் வரவில்லை .


SRITHAR MADHAVAN
பிப் 08, 2025 10:35

Income earned from Business only. Not from swindled money earned by Thiravida Thiruttu kumbal.


Sivagiri
பிப் 07, 2025 23:11

இங்கே கருணாநிதி அறக்கட்டளைக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்


Mediagoons
பிப் 07, 2025 22:39

கொள்ளையடித்து வைத்துள்ள பல லச்சக்கணக்கான கோடிகள் நாடுகடத்தப்பட்டு விட்டனவா ?


Savitha
பிப் 07, 2025 23:10

இப்படி உளறலா எழுதுறதுக்கு, தனியா, ₹200 ஊ பீ அமௌன்ட் அக்கவுண்ட் இல் போடுறாங்களா சார்? ஒருத்தன் பிள்ளைக்கு எளிமையா கல்யாணம் நடத்தி, அதுக்கு செலவு செய்திருக்க கூடிய பணத்துக்கும் மேல , அதிக தொகையை, நல்ல காரியத்துக்கு கொடுக்கிறாரு, அதை பாராட்ட மனசு இல்லைன்னா பரவாயில்லை, இப்படி கேவலமா கமெண்ட் போடாம இருங்க, மனுஷனா இருக்க பழகுங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 07, 2025 23:55

இந்த மூர்க்க goon க்கு திராவிட கார்ப்பரேட் குடும்பத்துக்கு அதுவும் ஹராமிய செயலான சாராய யாவார கார்ப்பரேட் குடும்பத்துக்கு அடிமையா இருந்து அதானியை தூற்றியே பழக்கம் .....


Mediagoons
பிப் 07, 2025 22:37

நாட்டு மக்கள் உலகமெல்லாம் நாடு கடத்தப்படுகிறார்கள். மாசுக்களிடம் சுரண்டியவர்கள் இப்படி பல்லாயிரக்கணக்கான கொடிகள் தன மக்களுக்காக வாரி இறைக்கிறார்கள்


புதிய வீடியோ