உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியா விஹார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறைவு

சோனியா விஹார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறைவு

சோனியா விஹார்:யமுனை நதியின் மாசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில், சோனியா விஹாரில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக டில்லி ஜல் வாரிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.டில்லியில் தினமும் 360 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது. இதில் 277 கோடி கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு யமுனை நதியில் கலக்கிறது. மற்றவை அப்படியே கலப்பதால், யமுனை சீர்கெட்டுப் போயுள்ளது.சோனியா விஹார், கரவால் நகர், கசூரி காஸ் ஆகிய பகுதிகளில் உள்ள பல அங்கீகரிக்கப்படாத காலனிகளில் இருந்து கழிவுநீரால் தற்போது சோனியா விஹார் வடிகால் நிரம்பி வழிகிறது.சோனியா விஹார் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, இங்கு தினமும் 3 கோடி லிட்டருக்கும் அதிகமான கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ