மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
33 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 12
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
4 hour(s) ago | 7
ஐதராபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியா சுகவீனமாக இருப்பதால், தெலுங்கானா போராட்டத்தை அதன் தலைவர்கள் ஒத்திவைக்க வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா குறித்த இறுதி முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும். மத்திய அரசை வழிநடத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற பொறுப்பில் சோனியா உள்ளார். அவர் தற்போது உடல்நலமில்லாமல் இருப்பதால், தெலுங்கானா குறித்த எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே தெலுங்கானா போராட்டத்தை அதன் தலைவர்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும். அவர் உடல்நலம் தேறி மீண்டும் இந்தியா வந்தவுடன் தெலுங்கானா தலைவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் போது கூட, சில காரணங்களுக்காக இது போன்ற போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவித்த ரோசையா, தெலுங்கானா தலைவர்கள் பொறுமை காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
33 minutes ago | 2
2 hour(s) ago | 12
4 hour(s) ago | 7