உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4 ஆயிரம் கோடியில் கேதார்நாத் ரோப் கார் திட்டம்; 9 மணி நேரம் பயணத்தை 36 நிமிடங்களாக குறைக்கும்!

ரூ.4 ஆயிரம் கோடியில் கேதார்நாத் ரோப் கார் திட்டம்; 9 மணி நேரம் பயணத்தை 36 நிமிடங்களாக குறைக்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 4 ஆயிரம் கோடி ரூபாய் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சோன்மார்க்- கேதார்நாத் பயண நேரம், வெறும் 36 நிமிடங்களாக குறையும்.டில்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி அரசு எடுத்த முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு விளக்கினார். https://www.youtube.com/embed/0MEgw3pXKXwஅஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக ,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் ஆகிய இரு ரோப் கார் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ரூ.6,800 கோடிக்கு மேல் செலவாகும். 12.9 கி.மீ., நீளம் கொண்ட சோன்மார்க்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு ரூ.4,081 கோடிக்கும் மேல் செலவாகும். தற்போது இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ரோப் வே அமைக்கப்பட்டால், பக்தர்கள் வெறும் 36 நிமிடங்களில் கேதார்நாத் சென்று விட முடியும். 12.4 கி.மீ ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே திட்டத்திற்கு ரூ.2,730 கோடி செலவாகும்.இரண்டு திட்டங்களும் பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக இருக்கும்.இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்சின் நிபுணர்களின் உதவியுடன் முடிக்கப்படும்.இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
மார் 06, 2025 06:47

இங்கே இருக்கற சென்னையை டில்லிக்கு பக்கத்திலே கொண்டு போயிரலாம். கொல்கொத்தாவை மும்பை க்கு அருகில் கொண்டு போயிரலாம். பயண நேரம் மிகவும் குறையும். சென்னை ஆளுங்க இந்தி படிப்பாங்க. டில்லி ஆளுங்க தமிழ் படிப்பாங்க. எப்புடி ஐடியா?


kr
மார் 06, 2025 06:10

Such Facilities for devotees are welcome. However government should ensure that local ecosystems and economic opportunities for locals are not impacted. The sanctity and divinity of Kedarnath should be preserved and not become another tourist spot.


தமிழன்
மார் 05, 2025 20:30

அதானிக்கு அடுத்த லாட்டரி அடிச்சாச்சு மோடி இருக்க கவலை ஏன்


N Sasikumar Yadhav
மார் 06, 2025 09:57

அதானி அம்பானிதான உங்க கோபாலபுர கொத்தடிமை கண்ணுக்கு தெரியும் . இங்கே தமிழகத்தை கொள்ளையடிக்கிற சன் குரூப் உங்க அடிமை கண்ணுக்கு தெரியாது


Oru Indiyan
மார் 05, 2025 19:32

வாழ்த்துக்கள்... இதற்கும் காங்கிரஸ் ,யாதவ், மம்தா, ஸ்டாலின், கும்பல் சப்தமிடாமல் இருந்தால் சரி.


K.P SARATHI
மார் 05, 2025 19:17

கடுமையன வரி சுமத்தப்பட்டு இது போல தேவை இல்லா திட்டங்கள் செலவு ஏன்


தமிழ்வேள்
மார் 05, 2025 19:52

டுமீல் நாட்டின் ஆயிரம் ரூபாய் பொம்மனாட்டி அஸிஸ்டன்ஸ் ஓசி பஸ் பயணம் போன்ற திட்டங்களை நோக்கி இப்படி கேள்விகள் ஏன் எழுப்பவில்லை?..சுட்லர் அப்பா வரி போடாமல் அவர் பாக்கெட்டில் இருந்தா கொடுத்தார்?


ராஜாராம்,நத்தம்
மார் 05, 2025 20:00

உம்மைப் போன்ற அறிவாலய அடிமைகளுக்கு இந்த திட்டம் பற்றிய அரிச்சுவடி தெரியுமா?


Sivak
மார் 05, 2025 23:08

ஆயிரம் ரூபாய் மாதாமாதம் விளங்காத பெண்களுக்கு எவன் அப்பன் வீட்டு காசுன்னு நெனைச்ச ? ரோப் கார் பயணம் ஓ சி பஸ் பயணம் மாதிரி இருக்காது ...


surya krishna
மார் 05, 2025 18:41

Fantastic scheme


இளந்திரையன் வேலந்தாவளம்
மார் 05, 2025 18:33

அருமை...


Nandakumar Naidu.
மார் 05, 2025 18:11

அப்படி நடந்தால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை