வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆட்டம் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை (மே 25) 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளில் முதல்முறையாக, முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத்தொடங்கி உள்ளது.நாளை (மே 25) அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் அதேபோல் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் (மே 26) அதி கனமழை (சிவப்பு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி,பத்தனம்திட்டாஇந்த பகுதிகளில் 24 மணி நேரத்தில் 7 முதல் 20 செ.மீ வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோட்டயத்தில் உள்ள குமரகம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.மே 24ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்டம் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது