உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணியில் பிளவு அதிகரிப்பு: உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

இண்டியா கூட்டணியில் பிளவு அதிகரிப்பு: உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இண்டியா கூட்டணியில் பிளவு அதிகரித்து வருவதால் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று உத்தவ் சேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறினார்.மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவு இன்று அறிவித்தது, இது மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணிக்கு பின்னடைவாகும்.2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் ஒரு கூட்டம் கூட நடக்கவில்லை என்று சஞ்சய் ராவத் ஏற்கனவே கூறியிருந்தார். மும்பையில் சஞ்சய் ராவத் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டால், அது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நாங்கள் எங்கள் பலத்தின் அடிப்படையில் போட்டியிடுவோம்.மகாராஷ்டிராவில் உள்ள இண்டியா கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரைக் கூட அவர்களால் நியமிக்க முடியவில்லை. இது நல்லதல்ல. கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக, கூட்டத்தைக் கூட்டுவது காங்கிரஸின் பொறுப்பாகும்.இவ்வாறு ராவத் கூறினார்.வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், 'இண்டியா கூட்டணியிலிருந்து விலகுவதற்கான உத்தவ் தாக்கரேவின் முடிவு அவரது மகன் ஆதித்யாவின் நலனுக்காக எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்அணி) தலைவர் சரத் பவார் ஆர்.எஸ்.எஸ்.ஐப் பாராட்டிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஜன 11, 2025 22:00

இண்டி கூட்டணி என்பதே ஒரு ஏமாற்று வேலை தான்....அந்த கூட்டணி...எலி ....தவளை ....கூட்டணி போன்றது ....ஒன்று தண்ணிக்கு இழுக்கும் .....மற்றொன்று தரைக்கு இழுக்கும் .


Mediagoons
ஜன 11, 2025 21:55

அம்பானியையும் தண்ணியையும் எதிர்த்துக்கொண்டு எதனை நாள்தான் பாஜ அல்லாத கூட்டணியில் இருக்கமுடியும் ?


sankaranarayanan
ஜன 11, 2025 21:23

தனித்து போட்டியிடுவோம் என்று உத்தவ் சேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறினார். இவரால்தான் பாவம் அந்த பலதாக்கரேயின் புதல்வர் தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறார் ஆரமபத்திலிருந்தே உத்தவ் தாக்கரையை உதவா தாக்கரையாக மாற்றிவிட்டார் இவரது போதனைதான் உதவி தாக்கரையை அமிஷாவிடமிருந்து பிரித்து தனித்து அரசு அமைக்க உதவிற்று தேர்தலுக்கு முன்பு அமித்ஷாவும் உத்தவதாகரையும் ஒரே வாகனத்தில் பயணம் செய்து மக்களை சந்தித்தார்கள் ஆனால் தேர்தல் முடிந்து ரிசல்ட்டு வந்தவுடன் சஞ்சய்ராவுத்தலின் அறிவுரையால் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது. உத்தவ்தாக்கரை உதவாத தாக்கரையாக மாற்றப்பட்டார்


M Ramachandran
ஜன 11, 2025 20:42

ராகுலு இருந்தால் ஆமை புகுந்த வீடு ஆகும். பிறறை மதிக்க தெரியாத தான் தான் எல்லாம் என்ற மமதை. நாட்டு பற்று சிறிதும் இல்லாத ராஜா வீட்டு கன்னுகுட்டி என்று நினைப்பு. இவன் அதுக்கு ஒத்து வர மாட்டான்" சினிமா வசனம் தான் பொருத்தம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 20:38

இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரா இருக்குற மேற்குவங்க அம்மையார் கூட காங்கிரசை உதாசீனம் பண்ணுறாங்க .... காங்கிரசை மடியில கட்டிக்கிட்டு ஊழல் பத்தி மத்வங்களை குறை சொல்லுற டீம்கா, இண்டி கூட்டணியோட கோஆர்டினேட்டரா ஆகணும் .....


Bye Pass
ஜன 11, 2025 20:13

உத்தவ் அவர்களை திரௌபதி நிலைமைக்கு தள்ளி விட்டுட்டார்


Amar Akbar Antony
ஜன 11, 2025 18:30

இந்த கட்சியின் தைரியம் அல்லது நம்பிக்கை கூட டி மு க விற்கு இல்லை


Nandakumar Naidu.
ஜன 11, 2025 18:28

உத்தவ் தாக்ரேவை இந்து விரோதி ஆக்கி நாசமாக்கியவர் இவரே தான் காரணம். எல்லோரையும் 15 அடி ஆழத்தில் புதைத்து விடுவேன் என்று மிரட்டி கொண்டு இருப்பார். இப்போது இவரே உத்தவ் தாக்கரே வின் சிவசேனா கட்சியை 15 அடி ஆழத்தில் புதைத்து விட்டார்.


சமீபத்திய செய்தி