அறிவை புகட்டுங்கள்!
பீஹாரில் தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ராகுல், அரசியலமைப்பை படிக்கவும் இல்லை. அதை மதிப்பதும் இல்லை. காங்கிரசில் நிறைய திறமை மிக்கவர்கள் உள்ளீர்கள். ராகுலுக்கு கொஞ்சம் அறிவை புகட்டுங்கள். கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
நாட்டை பிரித்த காங்கிரஸ்!
ஆகஸ்ட் 14. இந்த நாளில் தான் காங்கிரஸ் நாட்டை பிரித்து, பாரத தாயின் பெருமையை காயப்படுத்தியது. பிரிவினையின் காரணமாக கலவரம், அராஜகம், சுரண்டல் நடந்தன. கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,பதிலளிக்காமல் மிரட்டுகிறது!
பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில் 1 லட்சம் போலி ஓட்டுகள் உருவாக்கப்பட்டு, அதனால் பா.ஜ., வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். ஆதாரங்களையும் தந்தார். தேர்தல் கமிஷனிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். பிரியங்க் கார்கே கர்நாடக அமைச்சர், காங்.,