சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75வது வர்தந்தி மகோத்ஸவம்; நாளை துவக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75ம் ஆண்டு வர்தந்தி மகோத்ஸவ விழா, நாளை (மார்ச் 30) முதல் ஏப்.,4ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி சிருங்கேரி சாரதா மடத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசன்னிதானத்தின் 75ம் ஆண்டு வர்தந்தி மகோத்ஸவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானத்தின் சந்நியாச ஸ்வீகரின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் சுவர்ண பாரதி மஹோத்ஸவத்தை ஜகத்குரு ஸ்ரீ சன்னிதானம் வழிநடத்திச் சென்றுள்ளார். கடந்த 16 மாதங்களாக மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் போதும், இந்த வரலாற்று சிறப்புமிக்க மஹோத்ஸவத்திலும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.