உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை: மஹா., அரசு அறிவிப்பு

ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை: மஹா., அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மஹா., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அவரது உடல் இன்று(அக்.,10) காலை 10 மணி தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரம் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று(அக்.,9) இரவு 11.30 மணிக்கு காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று(அக்.,10) துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rk0lmc3b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, மஹா., முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரத்தன் டாடாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக, இன்று(அக்.,10) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் ரத்து

பிற்பகல் 3.30 மணியளவில், அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக வொர்லி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். துக்கத்தின் அடையாளமாக மஹாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய மூவர்ணக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மஹா.,வில் இன்று மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தென்காசி ராஜா ராஜா
அக் 10, 2024 20:38

நேர்மையான வழியில் வாழ்ந்த மாமனிதர்


Shekar
அக் 10, 2024 20:18

டாடாவின் உடல் தகனம் செய்யப்படவில்லை. பார்சி முறைப்படி மும்பையில் உள்ள ஒர்லி என்ற இடத்தில உள்ள தக்ஹமாவில்..அமைதி கோபுரம்.. வைக்கப்பட்டுவிட்டது. பார்சிக்கள் இறந்தபின் உடல் பறவைகளுக்கு உணவாக்கப்படும்.


Duruvesan
அக் 10, 2024 12:42

நன்றி மஹா


அப்பாவி
அக் 10, 2024 08:28

நிகழ்ச்சிகளை ரத்து செய்து டாட்டாவை இழிவு செய்யாதீர்கள். இன்னிக்காவது இரு மடங்கு உழையுங்கள்.


Kumar Kumzi
அக் 10, 2024 15:29

அடேய் திராவிஷ கருத்து சொல்ல வந்துட்ட கொத்தடிமையே


முக்கிய வீடியோ