உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திரா படுகொலையை சித்தரிக்கும் சிலைகள்: கனடாவுக்கு இந்தியா கண்டனம்

இந்திரா படுகொலையை சித்தரிக்கும் சிலைகள்: கனடாவுக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை ஆதரிக்கும் வகையில், கனடாவில் அதனை சித்தரித்து அலங்கார சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டின் நடவடிக்கைகளால், உறவு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.ப்ளூ ஸ்டார் ஆபரேசன் 40வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கனடாவின் பிராம்ப்டன் நகரில், முன்னாள் பிரதமர் இந்திராவை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்து அலங்கார சிலைகள் வைக்கப்பட்டன. இந்திரா சிலை பின்புறம் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், 1984 அக்.,31 ல் நடந்ததற்கு வழங்கப்பட்ட தண்டனை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில், கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் புகைப்படமும் உள்ளது. மேலும், அந்த போஸ்டரில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், தண்டனை காத்திருக்கிறது என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதற்கு முன்னர், கடந்த வாரம் வான்கூவர் நகரில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போதும், இதே போன்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக கனடா அரசிடம் தூதரக ரீதியில் புகார் அளிக்கப்பட்டது.இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது: வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொது வெளியில் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது கனடா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் இத்தகைய வெறுப்பு பிரசாரத்தினால், அச்சுறுத்தப்படுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கனடாவில் இந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் நடக்கிறது. இதனை தடுக்க கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.கனடாவிற்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும் , இங்கு கொடுக்கப்படும் ஆதரவு பற்றி பெரிய பிரச்னை உள்ளதாக கருதுகிறேன். இது இந்தியா - கனடா உறவுக்கு நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவிற்கான கனடாவின் தூதர் கேமரூன் மெக்கே கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை ஆதரித்து நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. பிரிவினைக்கும், வன்முறையை புகழ்வதற்கும் கனடாவில் இடம் இல்லை. இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Karthikeyan
ஜூன் 13, 2024 15:59

இதற்கு எதுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கனும்? இந்திராவை கொன்றதே கனடா ஆதரிக்கும் காலிஸ்தான் ஆதரவு சிங்குகள்தான் என்று கனடியன் ஒத்துக்கொள்கிறார். மேலும் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கும் கனடா நாடு அழியும் நாள் வெகு தொலைவிலில்லை...அதுவும் காலிஸ்தான் தீவிரவாதிகளாலேயே...


Vasudevan
ஜூன் 12, 2024 22:33

இந்த தீவிரவாத கூட்டத்திற்கு காவடி தூக்கும் ட்ருடோ. ஓட்டு வங்கிக்காக காலீஸ்தான் தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசுவது மிகவும் கேவலமான விஷயம். முன்னாள் பிரதமர், பதவியில் இருக்கும் போதே மிகவும் கொடூரமாக கொலை செய்த விஷயத்தை மீண்டும் சிலை போல் சித்தரிப்பது, இங்குள்ள போலீஸ் அதை வேடிக்கை பார்ப்பது. மிகவும் வெட்கக்கேடு.


S. Neelakanta Pillai
ஜூன் 11, 2024 19:19

எல்லை மீறுகிறது கனடா. தூண்டி விடுபவனை நம்பி களத்தில் இறங்கும் கனடா தனித்து விடப்பட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி சிந்தித்தால் நல்லது.


Madhavan
ஜூன் 11, 2024 18:41

கங்கணா மீது தாக்குதல் நடத்திய அந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தங்க மோதிரம் அளிப்பவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் .... இவர்களுக்கும் காலிஸ்தான் தீவிர வாதிகளுக்கும் என்ன வித்யாசம் ?


Pv, முத்தூர்
ஜூன் 11, 2024 18:39

தங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்தால், விரைவில் கனடாவும் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும்.


Barakat Ali
ஜூன் 11, 2024 17:00

இந்திராவின் படுகொலையை சித்தரிக்கும் சிலைகள் ..... இதை கனடா இரண்டாவது முறையாகச் செய்கிறது ... சொந்த கட்சியின் மாஜி தலைவி அவமதிக்கப்படுகிறார் .


அசோகன்
ஜூன் 11, 2024 16:41

மோடிஜி முன்னால் பிரதமர் என்ற முறையில் கண்டிக்கிறார்..... இந்த நாகரீகம் காங்கிரஸ் சிடம் திமுகவிடம் இல்லையே


Senthoora
ஜூன் 11, 2024 17:13

அவர்கள் என்ன சொல்ல, காலிஸ்த்தானின் கனடா அரசுக்கு ஆதரவு தரும் செயலை பாருங்க, வளர்த்த கனடா ஒருநாள் மார்பில் பாயும். அப்போ தெரியும் என்று இருக்கிறாங்க.


RAJ
ஜூன் 11, 2024 16:30

Where is Canada prime minister? Sleeping with scoring?????


karthik
ஜூன் 11, 2024 15:56

பிஜேபி அரசு கண்டனம் தெரிவிக்கிறது ....ஆனால் காங்கிரஸ் மௌனமாக இருக்கிறது....பஞ்சாபிகளின் ஓட்டுக்காக காங்கிரஸ் நிஜமாகவே ஒரு கட்சி.. காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேவை ஒரு சுத்தமான ஒரிஜினல் இந்திய தலைமை அப்போது தான் காங்கிரஸ் உருப்படும்.


குடந்தை செல்வகுமார்
ஜூன் 11, 2024 15:34

அங்கும் ஓட்டு வங்கி அரசியல் தான். அரசு மௌனம் காக்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை