கல்லுாரி கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
ரோஹிணி: கல்லுாரி கட்டடத்தில் இருந்து குதித்து பி.காம் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.டில்லியின் மகாராஜா அக்ராசென் கல்லுாரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் பரத் ராவத், 18. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கல்லுாரிக்கு வந்த மாணவர், கல்லுாரியின் 9வது மாடிக்குச் சென்று, கீழே விழுந்துள்ளார்.தகவலறிந்து வந்த போலீசார், மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவத்தனர்.முதற்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கல்லுாரியின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.