உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளை விட மாணவர்கள் தற்கொலை அதிகம்: ஆய்வில் பகீர் தகவல்

விவசாயிகளை விட மாணவர்கள் தற்கொலை அதிகம்: ஆய்வில் பகீர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் விவசாயிகளை விட மாணவர்கள் அதிகம் பேர் தற்கொலை செய்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.தேசிய குற்ற ஆவண பதிவேடு மூலம் கிடைத்த தகவல்களை வைத்து ஐசி3 என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 2 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதில் 4 சதவீதம் பேர் மாணவர்கள். இது விவசாயிகளின் எண்ணிக்கையை விட அதிகம். 0-24 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாக குறைந்துள்ளது. ஆனால், இந்த வயதில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 6,654 ல் இருந்து 13,044 ஆக அதிகரித்து உள்ளது.15 ல் இருந்து 24 வயதுள்ள இளம் வயதினரில் 7 ல் ஒருவர், மன அழுத்தம், ஆர்வமின்மை ஆகியவை காரணமாக மோசமான மன நிலையில் உள்ளனர். இவர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். 2021 ல் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 13,089 ஆக இருந்தது. இது 2022 ல் 13,044 ஆக அதிகரித்தது. இதில், மாணவிகளை விட மாணவர்கள் தான் அதிகம்.மஹாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ம.பி., ஆகிய மாநிலங்களில், தற்கொலை செய்வோரில் 3ல் ஒருவர் மாணவர்களாக உள்ளனர். தமிழகம் மற்றும் ஜார்க்கண்டில் ஆண்டுதோறும் முறையே 14 மற்றும் 15 சதவீதம் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இப்பட்டியலில், உ.பி., முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 10வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 29, 2024 12:24

ஆம் சமீபகாலத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் பல. ஒன்று படிப்பு சுமை. இரண்டு தனிமை. மூன்று வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில்/கல்லூரியில் ஆசிரியர்கள் நடந்துகொள்ளும் விதம். மூன்று - அரசியல்வாதிகள். அரசியல்வாதிகளா ...? ஆம், உதாரணத்திற்கு நீட் தேர்வை ஏதோ ஒரு பயங்கர மிருகத்தை எதிர்கொள்வது போல சித்தரித்து, மாணவர்களை பயமுறுத்தியது உதயநிதி போன்ற அரசியல் வியாதிகள். மாணவர்கள் படிப்பு விஷயத்தில், விஷயமே அறியாத அரசியல் வியாதிகள் தலையீடு முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். அதனால் ஏற்படும் மாணவர்கள் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.


sridhar
ஆக 29, 2024 12:18

நீட் மட்டும் அல்ல , எல்லா படிப்பையும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் யாரும் tharகொலை செய்து கொள்ளமாட்டார்கள் .


புதிய வீடியோ