உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல: மத்திய அரசு விளக்கம்

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல: மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல. கர்நாடகாவில் 20 பேரின் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல'' என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். தற்போது, கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது.இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறையும் பிற நோய்களுமே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா தடுப்பூசிக்கும், உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை. இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் நடத்திய விரிவான ஆய்வுகள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இளைஞர்கள் திடீர் மரணம் அடைவது குறித்து, புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து ஆய்வு நடத்தியது. மரபியல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம் என்பது தெரியவந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Iyer
ஜூலை 02, 2025 19:18

• தடுப்பூசி, இன்ஜெக்க்ஷன், வக்சினேஷன் போன்றவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுவது நிச்சயம் • நமக்கு வியாதி வராமல் தடுக்கும் சக்தியும் நம் உடலில் தான் உள்ளது. • நமக்கு வந்த வியாதியையும் குணமாக்கும் சக்தியும் நம் உடலுக்குத்தான் உண்டு. • ஆகையால் நாம் உட்கொள்ளும் உணவை - சமைக்காத காய்கறி, பழம் போன்றவை - சத்துள்ளதாக செய்தால் நமக்கு வியாதியும் வராது, வந்த வியாதியும் தீரும். • தடுப்பூசி, மருந்து, மாத்திரை, ஆஸ்பத்திரி , டாக்டர்கள் போன்றவற்றை நாடி சென்றால் நம் வியாதிகள் மேலும் பெருகும்


Sivasankaran Kannan
ஜூலை 02, 2025 16:12

சித்த பிரமை ராமாயா


அப்பாவி
ஜூலை 02, 2025 16:00

அவிங்களுக்கு அல்பாயுசு. அதான் காரணம்னு சொல்லிடுங்க. இல்லே நேருதான் காரணம்னு சொல்லுங்க. நம்பிடறோம்.


Jayakumar
ஜூலை 02, 2025 14:53

Post Covid vaccination, I have seen few of my colleagues affected with autoimmune disorder and aplastic anaemia. But no medical fraternity will accept it is due to vaccination. We need to accept Survival of the fittest theory.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 15:09

வதந்தி பரப்பியதற்கு உங்கள் மீதும் வழக்கு போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்ததால் கோவிட் 19 வந்து இறந்தவர்களின் குடும்பங்களை கேளுங்கள்.


GMM
ஜூலை 02, 2025 13:35

உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டு மக்கள் வாழ்கிறார்கள். இந்தியா நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் மாவட்டங்கள். ஹாசன் மாவட்டத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு. மரணம். கொரோனா தடுப்பூசி காரணம் என்று ஆதாரம் மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தி தர வேண்டும். பத்திரிக்கை ஆதாரம் கேட்டு செய்தி வெளியிடுவது நல்லது. பயம் நோயை அதிகரிக்கும்?


Ramesh Sargam
ஜூலை 02, 2025 12:56

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பல கோடி மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். அதை பற்றி பேசுவதை விட்டு விட்டு திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்று கூறும் சித்தராமைய்யாவுக்கு புத்தி கெட்டுவிட்டதுபோல தோன்றுகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 12:30

தவறாக வதந்தி பரப்பும் சித்தராமையா தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். மூத்த மருத்துவர்களே தைரியமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் நம்பிக்கையைக் குலைப்பது அக்கிரமம்.


சமீபத்திய செய்தி