உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: நிதி நெருக்கடியால் திலாவான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது கனரா வங்கி புகார் அளித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்கு தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளாக தீதீர்வு காண முடியாததால் திட்டம் தோல்வியடைந்தது. தற்போதைய மோசமான நிதிச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க வேண்டும். கடன்களை அடைக்க ஒருவரை நியமிக்க வேண்டும். கடன்களை திருப்பிச் செலுத்த நடவடிக்கைகளைத் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடங்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 07, 2024 20:46

இந்தியாவில் திவாலான எல்லா நிறுவனங்களையும் கலைக்கவேண்டும் . அதுபோல நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெரும் எல்லா அரசியல் கட்சிகளும் கலைக்கப்படவேண்டும்.


சமீபத்திய செய்தி