உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு திருட்டு புகார் மனு; சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

ஓட்டு திருட்டு புகார் மனு; சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

ஓட்டு திருட்டு புகார் தொடர்பாக, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பா.ஜ., உடன் தேர்தல் கமிஷன் கைகோர்த்து ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, ரோஹித் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது சம்பந்தமாக தேர்தல் கமிஷன் முன் மனுதாரர் கோரிக்கை வைக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். 'இது தொடர்பாக தேர்தல் கமிஷனை ஏற்கனவே அணுகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என, மனுதாரர் தரப்பு தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ