உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைத்த பயங்கரவாதி ; இறப்புக்குப் பின் கண்டறிந்த கனடா போலீஸ்

ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைத்த பயங்கரவாதி ; இறப்புக்குப் பின் கண்டறிந்த கனடா போலீஸ்

புதுடில்லி: 'கனிஷ்கா' ஏர் இந்தியா விமானம் குண்டு வெடித்து சிதறியதில், 329 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு காரணமான சந்தேக நபரை கனடா போலீசார், 40 ஆண்டுக்கு பின் அடையாளம் கண்டுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவின் டொரான்டோவில் இருந்து மும்பைக்கு, கனிஷ்கா ஏர் இந்தியா விமானம் 1985 ஜூன் 23ல் புறப்பட்டது. பிரிட்டனின் லண்டன் செல்லும் வழியில் அயர்லாந்து வான்பரப்பில் சென்றபோது, விமானத்தில் குண்டுவெடித்து சிதறியது. இதில் 22 விமான ஊழியர்கள், 307 பயணியர் என 329 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய பயங்கரவாதிகளே காரணமாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்து நிகழ்ந்த 40வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பலியானவர்களின் உறவினர்கள் சிலர் இந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளனர்.இந்த நிலையில், வெடிகுண்டு விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மீது விமான குண்டு வெடிப்பு தொடர்பான எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் கனடா தேசிய போலீஸ் தெரிவித்துள்ளது.வழக்கை விசாரித்த கனடா போலீஸ் உதவி கமிஷனர் டேவிட் தேபூல் கூறியதாவது: ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி தல்விந்தர் சிங் பார்மார், குண்டு தயார் செய்த இந்தர்ஜீத் சிங் ரேயாத் ஆகியோருடன் இந்த பயங்கரவாதியும் இருந்துள்ளார். வெடிகுண்டு சோதனை நடத்தியபோதும் உடன் இருந்துள்ளார். தனியுரிமை சட்ட விதிகளின்படி அவரது அடையாளத்தை நாங்கள் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 23, 2025 12:21

இந்திய கனடா உறவு சீர்படத் துவங்கியதால் வெளிவந்ததா ??


கண்ணன்
ஜூன் 23, 2025 11:30

பலமுறை சொல்லியாகி விட்டாயிற்று: உலகில் பாக்கும் கனடாவும் தீவிரவாதிகளை உருவாக்கி ஊக்குவிக்கின்றன


Tetra
ஜூன் 23, 2025 09:16

தீவிரவாதிய உருவாக்கி அவனுக்கு ஊக்கம் கொடுத்ததே இந்த ...


Pandi Muni
ஜூன் 23, 2025 08:32

இவ்வளோ சீக்கிரம் உங்களால கண்டு பிடிக்க முடிஞ்சிது


Thravisham
ஜூன் 23, 2025 08:25

தன் சுயநலத்துக்காக தீவிர வாதத்துக்கு ஆதரவளித்ததற்கு கடேசியில் அவரையே பலி கொண்டுவிட்டது.


Rajan A
ஜூன் 23, 2025 07:37

குண்டு வைத்தவனுக்கு மனித உரிமை, என்னே கருணை. சும்மா ஒரு ஆள் சதியில் ஈடுப்பட்டு இருந்தான், அவன் இப்போது இறந்து விட்டான்னு கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்களா? இப்போ இந்தியா தயவு தேவை, அதனால் தானோ?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 06:54

அவன் பெயரை கூட சொல்ல முடியல, அவன் இயற்கையை செத்தானா நோய் வந்து செத்தானா ?


subramanian
ஜூன் 23, 2025 06:40

டிரம்ப் கனடாவை ஆக்ரமித்து கைப்பற்றி விசாரணை நடத்தி சரி செய்வாரா


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 03:57

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கனடாவுக்கு தீவிரவாதிகள் ஆப்பு வைக்கும் பொழுதுதான் அவர்களின் தவறு புரியும்.


முக்கிய வீடியோ