உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை தாக்குதல் சதிகாரர் ராணா விசாரணையில் கூறிய திடுக் தகவல் என்ன?

மும்பை தாக்குதல் சதிகாரர் ராணா விசாரணையில் கூறிய திடுக் தகவல் என்ன?

மும்பை: மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஹூசேன் ராணா விசாரணை அதிகாரிகளிடம் பல திடுக்க தகவல்களை ஒப்பு கொண்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vf8n6az3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02008 ல் மும்பை பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தில் வெளிநாடுகளில் பதுங்கி இருந்த தஹவுர் உசேன் ராணா இந்தியா கொண்டு வரப்பட்டார் அவரிடம் தேசிய புலனாய்பு படையினர் கடந்த 18 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் பயின்று பாக்., ராணுவ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியதாகவும், இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புக்கு உதவிட இந்தியா சென்றதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடாப் போரில் தனக்கும் பங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் 2008 ல் தாக்குதல் நடத்தலுக்கு முன்னர் 2 நாட்கள் தங்கி இருந்ததாகவும், பயங்கரவதி ஹெ ட்லியுடன் தொடர்பில் இருந்தேன் என்றும், டில்லி, புனே,கோவா, என பல நகரங்களை சுற்றி வந்து நோட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.வளைகுடாப் போரின் போது பாகிஸ்தானின் உளவாளியாக சவுதி அரேபியாவில் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறினார். தனது கூட்டாளியான டேவிட் கோல்மன் ஹெட்லி, லஷ்கர்-இ-தொய்பாவுடன் பல பயங்கரவாத பயிற்சிகளில் கலந்து கொண்டதாகவும் ராணா தெரிவித்தார். மும்பையில் 2008 தாக்குதலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ க்கும் இடையில் நெருங்கிய உறவும் தொடர்பும் உண்டு என ராணா அம்பலப்படுத்தினார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சதிகாரர்களுடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு முதல் மும்பை தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடத்தப்பட்டார்

ராணா மீது குற்றவியல் சதி, கொலை, பயங்கரவாதச் செயல் மற்றும் மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.ராணா பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகன். அவர் ஏப்ரல் 2025 இல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Nachiar
ஜூலை 08, 2025 18:51

ஆமா, அது என்ன இந்த கொடூர கொலைகாரனுக்கு "அவர்" மரியாதை?


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 17:47

ஏதே சப்தம் இல்லாமல் சொல்லுப்பா அதானியும் உங்க 52 இஞ்சி மார்பும் கோவித்து கொள்ள போகுது


Rajalakshmi
ஜூலை 07, 2025 17:21

ஏற்கெனவே தெரிந்த தகவல்களையே மீண்டும் கூறினால் இதில் "திடுக் தகவல் என ஒன்றும் காணோமே ?


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 16:06

வெளிவருமா விஷயம் ஆர் எஸ் எஸ் & பி சே பி சதி திட்டம் கடைசிவரை உண்மை வராமலேயே முடிக்கப்பட்டு விடும் ஹேமந்த் கார்கே ஹேமந்த் கர்கரே, இந்தியக் காவல் பணி அசோகச் சக்கரம் பிறப்பு:12 டிசம்பர் 1954 – இறப்பு: 26 நவம்பர் 2008, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரக் காவல் துறையின் இணை ஆணையாரும், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவரும் ஆவார். இவர் 2008 மும்பாய் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார் இவரது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழலை மறைக்கவே இந்த சாதி திட்டம் திட்டமிட்டதாக கருதப்படுகிறது இப்போது இவரது மறைவு கூடிய விரைவில் நடக்கும் பின்பு அனைத்தும் மூடப்படும்


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 21:32

ஆக பாகிஸ்தானுக்கு முட்டுக் கொடுக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 15:52

ஆர் எஸ் எஸ் & பி சே பி சதி திட்டம் கடைசிவரை உண்மை வராமலேயே முடிக்கப்பட்டு விடும் ஹேமந்த் கார்கே ஹேமந்த் கர்கரே, இந்தியக் காவல் பணி அசோகச் சக்கரம் பிறப்பு:12 டிசம்பர் 1954 – இறப்பு: 26 நவம்பர் 2008, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரக் காவல் துறையின் இணை ஆணையாரும், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவரும் ஆவார். இவர் 2008 மும்பாய் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார் இவரது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழலை மறைக்கவே இந்த சாதி திட்டம் திட்டமிட்டதாக கருதப்படுகிறது இப்போது இவரது மறைவு கூடிய விரைவில் நடக்கும் பின்பு அனைத்தும் மூடப்படும்


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 19:06

அதற்குப் பிறகும் ஆறாண்டு காங்கிரஸ் திமுக ஆட்சி நடந்தது. அவ‌ர்க‌ள் என்ன விசாரிச்சு என்ன செய்தார்கள்?


Ashok Subramaniam
ஜூலை 07, 2025 19:46

அட முட்டாப்பயலுவளே... அப்போ ஆட்சியில இருந்தது இத்தாலிய காங்கிரஸும், திருட்டு முரட்டு கழகக் கொள்ளையர்களும்.. உங்களுக்கெல்லாம் தேசபக்தி உடைய ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஒரு ஊழலைக் கூடச் சுட்ட முடியாத அளவுக்கு ஆண்டு, பாரதத்துக்கு உலகளாவிய பெருமைகளைச் சேர்த்துவரும் 52 இன்ச் மார்புக்காரரைக் கண்டால் வெறுப்பாகத்தான் இருக்கும்..


ராமகிருஷ்ணன்
ஜூலை 07, 2025 14:55

முக்கியமாக பாக்கிஸ்தான் அரசுதான் தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை உற்பத்தி செய்கிறது என்பதை இவன் மூலம் ஆவணப்படுத்தி உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்று நிரூபித்து பாக்கிஸ்தானுக்கு பிற நாடுகளின் உதவிகள் கிடைக்காத படி செய்ய வேண்டும். அதையும் மீறி உதவும் நாடுகளுடன் வியாபார தொடர்பு முறித்துக் கொள்ள வேண்டும்.


V RAMASWAMY
ஜூலை 07, 2025 14:48

இந்த விசாரணை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும், எப்பொழுது தண்டனை, அவரது நூறாவது வயதிலா?


subramanian
ஜூலை 07, 2025 16:05

கையாலாகாத கான் காங்கிரஸ், மெழுகுவர்த்தி ஏந்தி பிச்சை எடுத்த கேவலமான நிலையில் இருந்து இப்போது குற்றவாளி நம்ம நாட்டு சிறையில் பதில் சொல்லிட்டு இருக்கான்.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:40

அப்போது மும்பைல நடந்தது தீவீரவாத தாக்குதல் அல்ல. வெறும் சிலிண்டர் வெடிப்புதான் என சமாளிக்க மன்மோகனுக்குத் தெரியவில்லை. இப்போது கூட ஒரு சிறுபான்மையின ராணாவை கைது செய்துள்ளது காங்கிரசுக்கு பிடிக்குமா என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை