உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு!

மும்பையில் மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் சட்டசபை தேர்தலில், மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,895 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் 2014, 2019ம் ஆண்டு பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. தமிழரான, இவர் 3 முறை எம்.எல்.ஏ., ஆனது அங்கு வசிக்கும் தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த தமிழ்செல்வன்?

* புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்செல்வன் மஹா.,வில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ.,வானவர்.* இவர் 1980ம் ஆண்டு காலத்தில் துபாய்க்கு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறப்பட்டு, மும்பை ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். இவர் அங்கு கூலி தொழிலாளராக பணியாற்றி உள்ளார்.* இவரது தாய் மற்றும் தம்பி புதுக்கோட்டையில் தான் வசித்து வருகின்றனர்.*2008ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த போது, களத்தில் இறங்கி, 36 பேரின் உயிரை காப்பாற்றினார்.* இவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை உள்ளடக்கிய சியோன்- கோலிவாடா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.,வாக மஹா., சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.* இவரை மக்கள் பெயர் சொல்லி அழைப்பதை விட, கேப்டன் என்று அன்பாக அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ravi Kulasekaran
நவ 29, 2024 12:45

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.


Mr Jonesh
நவ 26, 2024 09:18

குட் ஜோக்..


Subamaniyan
நவ 25, 2024 06:54

பம்பாய் மக்களுக்கு வாழ்நாளெல்லாம் கை சுத்தமாக நல்லதே செய்து வாழ்நாள் முழுவதும் எம்.எல.ஏ ஆக தொடர வாழ்த்துக்கள்.


Subamaniyan
நவ 25, 2024 06:49

சூப்பர்...பம்பாய் வாழ் மக்களுக்கு பேதம் இல்லாமல் எல்லோருக்கும். கை சுத்தமாக நல்லதே செய்து நற்பெயர் எடுத்து நீடூழீ வாழ்ந்து அங்கே வாழ்நாள் முழுதும் எம.எல்.ஏ ஆக தொடர வாழ்த்துக்கள்.. சுபம்.


sankaranarayanan
நவ 24, 2024 20:56

தமிழ்செல்வனுக்கும் தாமரைக்கும் உள்ள உறவு, நட்பு நன்றாகவே தெரிகிறது அவர் தாமரை அரசில் ஒரு தமிழ் பேசும் அமைச்சராக வட இந்தியாவில் வருவது போற்றத்தக்கது தமிழ்நாட்டிற்கும் பெருமையை தரக்கூடிய விஷயம் அனைவரும் போற்றுவோம் பாராட்டுவோம்


பாலா
நவ 24, 2024 18:11

சொறியனின் மண்ணில் பிறந்து திராவிடியன்களின் பிச்சையில் வென்று வந்துள்ளார் ஒரு தமிழர் என்று தெலுங்குப் பாரதி சொல்லிவிடுவார்


விவசாயி
நவ 24, 2024 17:49

உங்கள் தொகுதி மக்களுக்கு நல்லது செய்யுங்கள் சார், பல mla க்கள் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவதே இல்லை.


Suresh Sivakumar
நவ 24, 2024 17:26

Like Telugu family ruling in tamilnadu, a tamilian has been elected thrice in maharashtra. Just that he has come up the hard way serving the people, but not looting like our rulers


Bye Pass
நவ 24, 2024 14:35

மாதுங்கா பகுதியில் வரதா ரொம்ப பிரபலமா இருந்தார் .


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
நவ 24, 2024 14:20

நல்வாழ்த்துக்கள்.


புதிய வீடியோ