உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு

டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிரான வழக்கை, வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qsf2mvpj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம்' என, அமலாக்கத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை என டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையை நீதிபதிகள் கண்டித்தனர்.அடுத்த சில நாட்களிலேயே, வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்தது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் 7ம் தேதிக்கு பட்டியலிட நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Dharmavaan
ஏப் 04, 2025 21:26

இதில் சதி இருக்கிறதென்று நான் கருதுகிறேன் விவரமறிந்தவர்கள் சொல்ல வேண்டும்


Karthik
ஏப் 04, 2025 21:23

நீதிபதி சஞ்சீவ் கண்ணா அவர்களே தயவுசெய்து வழக்கை கர்நாடகாவிற்க்கு மாற்றாமல் யோகியின் உத்தரபிரதேச மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுங்கள். மேலும் நீதிமன்றம் ஏற்கும் இந்த கோரிக்கை மனுவே மாநில அரசின் கடைசி கோரிக்கை மனுவாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு மாதமும் இரண்டு மூன்று கோரிக்கை மனு கொடுப்பர்..


SIVA
ஏப் 04, 2025 20:37

தன் வினை தன்னை சுடும் அன்று அம்மா அவரகள் வழக்கை இவர்கள் வேறு மாநிலத்திற்கு மாற்றினார்கள் , இன்று இவர்கள் வழக்கை இவர்களே வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சொல்கின்றார்கள் , இது தான் கர்மா ....


SIVA
ஏப் 04, 2025 20:27

முதல் பெஞ்ச் நீதிபதி ஒருவர் திமுக எம் எல் எ ஒருவரின் மகன் அது தீமூகவிற்கு தெரியாது , இரண்டாவது பெஞ்ச் நீதிபதி ஒருவர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு தெரிந்தவர் இதனால் வழக்கு தீர்ப்பு தவிட்டு திராவிட மாடல் அரசுக்கு சாதகமாக வந்தால் நீதியரசர் மற்றும் அரசை யாரேனும் குறை சொல்வார்கள் என்ற நல்ல எண்ணத்தில் வேறு மாநிலத்திற்கு மாற்ற கேட்க பட்டு உள்ளது , இதையும் சிலர் குறை கூறினால் என்ன செய்வது, தல இதுக்கு மேல இந்த விஷயத்தில் முட்டு கொடுக்க முடியாது , எனக்கு பேட்டா எல்லாம் வேண்டாம் , உங்க IT விங் உங்களைவிட ரொம்ப வீக்கா இருக்கு , அத சரி பண்ண முடியுமா என்று பாருங்கள் ...


sankaranarayanan
ஏப் 04, 2025 19:30

டாஸ்மாக் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது நக்கீரன் சொன்னதுபோன்று குற்றம் குற்றம் தான் அதை மறைக்கவோ மறுக்கவோ அழிக்கவோ முடியவே முடியாது. இன்னும் வீறுகொண்டு எழும். அரசின் மக்களின் பல லட்சம் ரூபாய் பணத்தை எப்படி வீணாக்குவது என்று திட்டமிட்டு செய்யும் அராஜகம். மக்களுக்கு இதனால் எதுவும் பயன்படபோவதில்லை


Murthy
ஏப் 04, 2025 18:53

டெல்லிக்கு மாற்றி .....குற்றம் சாட்டப்பட்டவர்களை அங்கு திகார் ஜெயிலில் அடைத்து விசாரணை செய்யவும் . ....


kumarkv
ஏப் 04, 2025 18:36

அப்படியே ஞானசேகரன் வழக்கையும், நிரபராதி என்று சொல்லி அந்த பல்கலைக்கழகம் வாயிலாக அவனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து திரவிட மாடலில் சிலை வைக்கவும். பல்கலைக்கழகம் பெயரை ஞானசேகரன் பெயருக்கு மாற்றவும்


M Ramachandran
ஏப் 04, 2025 18:21

ஏன் கேசை ஐ நா விற்கே மாற்ற சொல்ல வேண்டியது தானே. ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை. வாதாட மட்டும் அரசிடம் செலவு செய்ய கொட்டி கொடுக்க பணம் எங்கிருந்து வருது. பஞ்சமா பாதகங்கள் அரசியலில் சர்வ சதாரணம். சாதிக் பாஷா மர்மம் தா. கிருட்டினன் மற்றும் காளிமுத்து அவர்கள் மரணங்கள். கேசில் மாட்டிய சிறிய மீன்கள் தப்பி வெளிநாடு என்றால் நல்லது. ஜெயலலிதா விற்கே சென்னை ஏர்போர்ட் அருகில் மீனம்பாக்கத்தில் மரண பயம் காட்டியவர்கள். அஞ்சா நெஞ்சினர்கள்.


M Ramachandran
ஏப் 04, 2025 18:10

ஏதோ நிஜமாக பெரிய விஷயம் நடந்து இருக்கு. அதனால் தான் இவ்வளவு பதற்றம்.சாமான்ய திருட்டைய தொழிலாக கொண்டிருக்கும் திருடன் திருட்டை ஒத்து கொள்வான்.இதுக ஜெகஜால கில்லாடிகள் இந்திய பகுதியையெ கூறு போட்டு வித்து விடுவார்கள் போலிருக்கே? நீதி மன்றம் மிக ஜாக்கிரதியாக அடி எடுத்து வைக்க வேண்டும்.


konanki
ஏப் 04, 2025 17:42

இன்னும் சார்ஜ் ஷிட் கூட வரவில்லை.ரெய்டுக்கே இவ்வளவு வழக்குகள்.போகிற போக்கை பார்த்தால் கீழ் கோர்ட்,அப்பீல்,ஹை கோர்ட், அப்பீல், சுப்ரீம் கோர்ட், அப்பீல் எல்லாவற்றிலும் வாய்தா.அப்பப்ப பப்பா கண்ணை கட்டுது.இறுதியாக ஓரு தீர்ப்பு 2075 லில் தான் வரும் போல் தெரிகிறது. இந்திய ஜனநாயகம் வாழ்க