உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவராத்திரி முதல் நாளில் 30 ஆயிரம் மாருதி கார் விற்பனை: ஹூண்டாய் 11 ஆயிரம், டாடா மோட்டார்ஸ் 10 ஆயிரம் கார் விற்பனை

நவராத்திரி முதல் நாளில் 30 ஆயிரம் மாருதி கார் விற்பனை: ஹூண்டாய் 11 ஆயிரம், டாடா மோட்டார்ஸ் 10 ஆயிரம் கார் விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரி முதல் நாளான நேற்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரம் கார்கள் டெலிவரி வழங்கியுள்ளது. அதேபோல் முதல் நாளில் 30 ஆயிரம் கார்கள் விற்பனை ஆனதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளதால், கார்கள், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் சரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக, வாகனங்களின் விலை, கணிசமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும், தங்கள் விலைக்குறைப்பு பட்டியலை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sr0yg55h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விலைக்குறைப்பு அமலுக்கு வந்த செப்.,22ம் தேதி (நேற்று) மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10 ஆயிரம் கார்களை டெலிவரி வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி, 25 ஆயிரம் பேர், புதிய கார் வாங்க விசாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.புதிய கார் விற்பனை மட்டுமின்றி, பழைய கார்களின் விற்பனையும் களை கட்டியுள்ளது. கார்ஸ்24 என்ற பழைய கார் விற்பனை நிறுவனம், வர்த்தக விசாரணை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 5 ஆயிரம் பேர் கார் வாங்க நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் நவராத்திரி முதல் நாளான நேற்று மட்டும் 30 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது மட்டும் இன்றி நேற்று ஒரு நாளில் மட்டும் 80 ஆயிரம் பேர் புதிய கார் வாங்குவதற்காக தங்களிடம் விசாரித்துச் சென்றுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஹூண்டாய் நிறுவனம் 11 ஆயிரம் கார்களை நேற்று விற்பனை செய்துள்ளது.இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

naga
செப் 23, 2025 20:39

இந்தியாவில் இந்த கரப்பான்பூச்சிகள் போல அலைபாயும் டிராபிக்கில் கார் ஓட்டுவது என்பது எத்தனை சவாலானது என்பது டிரைவர்களுக்கு தான் வெளிச்சம். பணம் கொடுத்தால் கார் மட்டுமல்ல லைசன்ஸ்சும் எளிது என்பதால் இங்கு ஜிம்மிக் எல்லாமே சாத்தியம் தான்.


தாமரை மலர்கிறது
செப் 23, 2025 19:26

பாதுகாப்பு வரி என்று பத்து சதவீத வரியை ஜிஎஸ்டியில் உயர்த்துங்கள் என்று மக்கள் கெஞ்சிக்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு பத்து சதவீத வரியை குறைத்தால், மக்கள் குஷியாக குதூகலிப்பார்கள் தான்.


venugopal s
செப் 23, 2025 18:37

இதை டெஃப்பர்ட் பர்ச்சேஸ் என்பார்கள்.கடந்த பதினைந்து இருபது நாட்களாக யாருமே கார் வாங்காமல் காத்திருந்து ஜி எஸ் டி ஆதாயத்துடன் நேற்று முதல் வாங்குகின்றனர், அவ்வளவு தான்!


MUTHU
செப் 23, 2025 18:15

வாங்கி குடிக்க எவன் தயாரா இருக்கான். சாராயம்னா குடிக்க தயாரா இருப்பான்.


Gopinathan S
செப் 23, 2025 17:42

டிராபிக் ஜாம் இன்னும் சூப்பரா இருக்கும், வாழ்க மக்கள்


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2025 16:42

கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகளாக ஜிஎஸ்டியை காரணம் காட்டி பிரதமர் மோடியையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் திட்டித் தீர்த்தன எதிர்க்கட்சிகள். ஆனால் ஜிஎஸ்டி வருமானத்தில் திளைத்தன. இப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பினால் மக்கள் அரசை பாராட்டுபோது வெற்றியில் பங்குகேட்டு கூப்பாடு போடுகின்றன. திட்டுக்களை வாங்கியவர்களுக்குத்தான் பாராட்டும் உரித்தாகும்.


duruvasar
செப் 23, 2025 15:52

எரியுதடி மாலா.. .. . . . பேனை 25 இல் வையுடி .


duruvasar
செப் 23, 2025 15:50

இதே மாதிரி ஆவின் நிறுவனமும் ஒரே நாளில் 1 லச்சம் லிட்டர் பால் அதிகமாக விற்றோம் என சொல்வார்களா


சமீபத்திய செய்தி