உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தமா; அன்புமணிக்கு வந்தது சந்தேகம்!

ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தமா; அன்புமணிக்கு வந்தது சந்தேகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்திற்குள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறி உள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு: தமிழகத்தில் நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா? மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும். தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலை ஆசிரியர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் ஆசிரியர்களை நியமிப்பதில் செய்யப்படும் காலதாமதத்தையும், அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்த செய்திகள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டின் தொடக்கத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதமே வெளியிடப்பட்ட பிறகும் அவர்களுக்கு பணியமர்த்தல் ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.அரசு பள்ளிகளுக்கு 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, ஜூலை 21ம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அரசு கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் 14ம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4ம் தேதி நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. அந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் எந்த செய்தியும் இல்லை.அதேபோல், தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப் போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன.ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான முதன்மைத் தேவை கல்வி தான். தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 % செலவிட வேண்டியுள்ள நிலையில், ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான தொகை தான் செலவிடப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்காக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாவது ஒதுக்கப்பட வேண்டும். இதுவும் கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 3% என்ற அளவில் தான் இருக்கும். முதற்கட்டமாக இந்த அளவு நிதியை ஒதுக்கீடு செய்து விட்டு, படிப்படியாக இதை அதிகரிக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி தமது பதிவில் கூநி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sampanthasuganya
அக் 11, 2024 10:08

அன்புமணி மட்டும்தான் பொது மக்களிடம் எப்போதும் கவலைப்படுகிறார்


sampanthasuganya
அக் 11, 2024 10:04

தயவு செய்து உதவி தேர்வை நடத்துங்கள். இல்லை என்றால் ஆட்சியை விரட்டுகள் .


sampanthasuganya
அக் 11, 2024 10:03

தயவு செய்து உதவி தேர்வை நடத்துங்கள். இல்லை என்றால் ஆட்சியை விரட்டுகள் விலகுங்கள்


gowdham sivikai
அக் 01, 2024 14:58

தயவு செய்து உதவி தேர்வை நடத்துங்கள். இல்லை என்றால் ஆட்சியை விரட்டுகள் விலகுங்கள்


Mahendran Puru
செப் 26, 2024 08:29

அன்புமணி அப்படியே வடக்கே பார்த்து ஒரு குரல் கொடுங்க பார்க்கலாம், வரவேண்டிய நிதியை மேலும் தாமதிக்காமல் அனுப்பச் சொல்லி.


உச்சிப்புளி சேகர்
செப் 25, 2024 18:00

மரங்களை வெட்டி சாகையில் போட்டது தவிர எல்லாம் அநியாயம். அதர்மம்.


Saravana
செப் 25, 2024 14:55

ஆசிரியர்களை சரியாக வேலை வாங்காமல் அவர்களை வைத்து emis மற்றும் Clerk பணி செய்து கொண்டு இருக்கிறது அரசு... அரசு பள்ளியில் கல்வி தரம் நன்றாக இருந்தால் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல மாட்டார்கள் என்பதால் ஆசிரியர்களை பாடம் நடத்த வைக்காமல் கொடுக்கும் சம்பளத்திற்கு மற்ற பணிகளை செய்ய வைக்கிறார்கள்.


Apposthalan samlin
செப் 25, 2024 13:20

surplus என்று தேவைக்கு அதிகமாக டீச்சர்ஸ் அரசாங்கம் வைத்து இருக்கிறது உள்ள டீச்சர்ஸ் கே வேலை இல்லை .புதிதாக டீச்சர்ஸ் எப்படி எடுக்கும் அப்படி எடுத்தால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை