உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணும்; அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் காட்டம்

கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணும்; அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் காட்டம்

ஹைதராபாத்: சந்தியா தியேட்டரில் நிகழ்ந்த சம்பவங்கள் போன்று, கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.கடந்த டிச.,4ம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்ற போது, கூட்டநெரிசல் ஏற்பட்டது. இல், 25 வயதுடைய பெண் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே விடப்பட்டுள்ளார். அவரது கைது நடவடிக்கை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ., அக்பருதீன் ஓவைசி எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்து பேசியதாவது: புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காக, டிச.,4ம் தேதி டாப் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சில பிரபலங்கள் தியேட்டருக்கு வருவதாகக் கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிச.,2ம் தேதி மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, போலீசார் அந்த மனுவை நிராகரித்துள்ளனர். அனுமதி மறுத்த பிறகும் நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்துள்ளார். வரும் போது, காரின் சன் ரூப் திறக்கப்பட்டு, அதில் நின்றவாறு ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி வந்துள்ளார். இதனால், குஷியான ரசிகர்கள், அவரை நோக்கி முண்டியடித்து சென்றுள்ளனர். இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த பிறகும், திரையரங்கை விட்டு வெளியேற நடிகர் அல்லு அர்ஜூன் மறுத்தார். போலீசார் உடனடியாக அவரை வெளியேற்றினர். கைதாகி வெளியே வந்த பிறகு அல்லு அர்ஜூனை அவரது வீட்டுக்கே சென்று பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி தாயை இழந்த பிறகு, கோமா நிலையை அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க அவர்களுக்கு மனம் வரவில்லை. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவர்களை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, எனக் கூறினார்.

அல்லு அர்ஜூன் விளக்கம்

டிசம்பர் 4ம் தேதி சந்தியா தியேட்டரில் நடந்தது எதிர்பாராத விபத்து தான். இது முழுக்க முழுக்க விபத்து தான். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் உடல்நிலை குறித்து மணிக்கு ஒரு முறை கேட்டறிந்து வருகிறேன். முன்பை விட தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்த துறையையும், அரசியல்வாதியையும் குறை சொல்ல விரும்பவில்லை. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankar
டிச 24, 2024 19:32

தெலுங்கானா முதல்வருக்கு மூளையே கிடையாதுபோல...


நிக்கோல்தாம்சன்
டிச 22, 2024 07:15

இது ABVP ப்ரொடக்ட்


ஆரூர் ரங்
டிச 21, 2024 22:30

கேரளாவில் நடிகர்கள் சாதாரண மக்கள் போலவே பொது இடங்களில் நடமாடுவதைக் காணலாம். மற்ற தென் மாநிலங்களில் நடிகர்கள். பின்னால் பித்துப் பிடித்த மாதிரி அலைகிறார்கள். தவறு ரசிகர்களுடையதே.


bharathi
டிச 21, 2024 22:22

next pavan ready for telungana.. RR game end soon


சிவம்
டிச 21, 2024 22:19

படம் பற்றி ரசிகர்களின் வரவேற்பை காண ஆர்வம் மிகுதியால் வந்து விட்டார். மக்கள் எக்கேடு கெட்டு போகட்டும் என்ற உணர்வு அரசியல்வாதிகளுக்கு உண்டு தவிர, கண்டிப்பாக நடிகர்களுக்கு அவ்வாறு இருக்காது. அல்லு அவர்கள் மாறுவேடத்தில் வந்திருக்கலாம். ஒரு உயிர் போயிருகாது. மக்களும் திருந்த வேண்டும். தெலுங்கானா முதல்வர் கொடுத்துள்ள அறிக்கை அபத்தம். மன்னிக்க முடியாது என்று கூறுவதற்கு இவர் யார். வழக்கு தொடுக்க பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையாக இருத்தல் அவசியம்.


Saminathan Subramani
டிச 21, 2024 21:24

Next year துணை முதமைச்சர் படம் release ஆகும் போதும் இதே Rules இருக்குமா?


tamilaga kudimagan
டிச 21, 2024 21:23

சூப்பர்..


aaruthirumalai
டிச 21, 2024 21:17

சரியாத்தான் சொல்லுகிறார். தற்போதைய சூழலுக்கேற்ப சாமானிய மக்கள் சில நிகழ்வுகளில் விலகி நிற்பதே நன்மையாகும்.


m.arunachalam
டிச 21, 2024 21:09

நல்ல முடிவு, பாராட்டுக்கள் . சமூகத்தை இவர்கள் மிக மிக அதிக அளவில் நேரம் , சக்தி மற்றும் பணம் ஆகிய விஷயங்களில் வீணடிக்கிறார்கள் .


sathish
டிச 21, 2024 21:00

I don't like congress. but the way Mr. Revanth reddy approach this case was much appreciated


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை