உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தீவிரம் அடையும் போராட்டங்களால் பதற்றம்; கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைப்பு

டில்லியில் தீவிரம் அடையும் போராட்டங்களால் பதற்றம்; கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைப்பு

புதுடில்லி: டில்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் மேற்குவங்கத்தில் இருந்து சிஆர்பிஎப் படையின் 20 குழுக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினத்தை போலவே நேற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.இந்நிலையில் 3வது நாளாக இன்றும் (ஜூலை 22) ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது. டில்லியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் இருந்து சிஆர்பிஎப் படையின் 20 குழுக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், ''பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கிலும், போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் கூடுதலாக சிஆர்பிஎப் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்'' என்றனர். இதனிடையே, பாதுகாப்பு காரணங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மூடப்பட்டுள்ள மெட்ரோ நிலையங்களின் விபரம், லோக் கல்யாண் மார்க் ராஜீவ் சவுக் படேல் சவுக் ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க் பாராகம்பா சாலை உச்ச நீதிமன்றம் சேவா தீர்த் ஜன்பத் மண்டி ஹவுஸ் மத்திய தலைமையகம்ஐடிஓ டில்லி கேட் இந்திரப்பிரஸ்தா கான் மார்க்கெட் ஜோர் பாக் சிவாஜி ஸ்டேடியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

விருமாண்டி
ஜூலை 23, 2026 22:18

கொளுப்பெடுத்து இறுமாப்புடன் அலையும் சர்வாதிகாரிகளின் முடிவு ஒன்று போலவே இருக்கும் என்பதை சரித்திரம் பதிவு செய்துள்ளது.


என்றும் இந்தியன்
ஜூலை 22, 2026 17:10

தவறு கண்டேன் சுட்டேன். இது ஒன்றே இதன் தீர்ப்பு. எல்லாம் சரியாகிவிடும் உடனே????


Vijay D Ratnam
ஜூலை 22, 2026 15:52

ரெண்டு வருஷம் முன்னால பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் என்று முயற்சி செய்து ஊத்திக்கிச்சி. இப்போ கரப்பான்பூச்சிய இறக்கி உட்டுருக்காய்ங்க.


Mario
ஜூலை 22, 2026 14:12

ஒரு கட்சிக்கு அழிவு நிச்சயம்


ram
ஜூலை 22, 2026 16:40

இத்தாலி காங்கிரஸ்


sathyanarayhanan
ஜூலை 22, 2026 17:20

புலம்பிக்கொண்டு இருக்கிறாய்.


Balasubramanian
ஜூலை 22, 2026 13:22

அடுத்த வருடம் ஆரம்பத்தில் February March இல் பஞ்சாப் உததிராகண்ட் உத்திர பிரதேச மாநில அரசுகள் ஐந்து ஆண்டு காலம் முடிவடைந்து தேர்தல் காண இருக்கின்றன! அதை சந்திக்க இப்போதே தயார் ஆகின்றன எதிர் கட்சிகள்!


சத்யநாராயணன்
ஜூலை 22, 2026 11:55

உடனடியாக டெல்லி மாநகரை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுத்து இந்த தீவிரவாத கரப்பான் பூச்சிக் கூட்டங்களை சுட்டுத்தள்ளுங்கள் ராணுவத்தினருக்கு தீவிரவாதிகளை சுட்டு தள்ளுவதற்கு முழு அதிகாரமும் உண்டு அவர்களை கேள்வி கேட்க முடியாது இதில் எந்த ஜனநாயகமும் வேண்டாம்


Govi
ஜூலை 22, 2026 11:25

சுட்டு தள்ளு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை