உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் பயங்கரவாதிகள் பதுங்குமிடம் அழிப்பு; ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு

ஜம்முவில் பயங்கரவாதிகள் பதுங்குமிடம் அழிப்பு; ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதக் குவியலை ராணுவம் கண்டறிந்துள்ளது.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் உளவுத்துறை தகவல் அடிப்படையில் ராணுவம் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் குப்வாரா மாவட்டம், கேரன் செக்டார் பகுதியில் சோதனை நடத்தினர்.சோதனையில் அங்கு பதுங்குகுழி ஒன்று இருப்பது ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அதனுள் சென்று பார்த்த போது 5 ஏகே ரக துப்பாக்கிகள், 9 ஏகே ரக துப்பாக்கிக்குண்டுகள், கைக்குண்டுகள், வெடி மருந்துகள் மற்றும் போர் தொடர்பான ஏராளமான பொருட்கள் இருப்பதை கண்டனர்.அனைத்தையும் கைப்பற்றிய ராணுவத்தினர், தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தி உள்ளனர். ஏதேனும் நாசவேலைக்கு திட்டமிட்டு, பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை அமைத்து இருக்கலாம் என்பதால் கூடுதல் படைகளுடன் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 07, 2026 22:27

இப்படி ஒவொண்ணா அழிப்பதற்கு பதில், மொத்தமா அழிக்கவேண்டும்.


V RAMASWAMY
ஜூலை 07, 2026 19:42

இவையெல்லாம் ஜுஜுபி. இதைப்போல பலப்பல இடங்கள் இருக்கலாம், அவற்றையும் அறவே ஒழிக்கவேண்டும். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு செலவழிப்பதைவிட நம் நாட்டில் பயங்கரவாதத்திற்கே அதிகம் செலவிடும் மடையர்கள் நாடு அது. அவர்கள் வாலை வெட்டி, துண்டங்களாக்கி பலோசிஸ்தான், சிந்து பிரதேசம் என தனித்தனி துண்டாகவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை