உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி; ரத்தன் டாடாவின் கடைசி பதிவு

என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி; ரத்தன் டாடாவின் கடைசி பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மறைவதற்கு முன், தனது உடல்நிலை குறித்து, தொழிலதிபர் ரத்தன் டாடா வெளியிட்ட கடைசி பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல முன்னணி தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8nits97g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பே ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து 7ம் தேதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது, 'எனது உடல்நிலை குறித்து வதந்தியான செய்தி சமூகவலைதளங்களில் உலா வருவதை நான் அறிவேன். அது எதுவும் உண்மையில்லை. எனது வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளுக்கான பரிசோதனைகள் மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எனது உடல்நிலை குறித்து போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்', எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, என்னை பற்றி நினைத்ததற்கு மிகவும் நன்றி எனவும் பதிவிட்டிருந்தார். இதுவே ரத்தன் டாடாவின் கடைசி சமூக வலைதளப்பதிவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Abdul Hameed
அக் 13, 2024 20:31

I loverattantata


Abdul Hameed
அக் 13, 2024 20:30

Unmaianaulaippali nanavrundugiran


chails ahamad
அக் 11, 2024 15:02

மனிதநேயம் மிகுந்தவரை இழந்திருக்கும் நாமெல்லாம் , அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திப்போம் .


அப்பாவி
அக் 10, 2024 18:11

அவர் உயிரோடு இருக்கும் போது சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரு. போனப்புறம் அவர் இப்புடி, அப்புடின்னு புகழாரம் போட்டி போட்டுக்கிட்டு பாடறாங்க. அவரது நற்செயல்கள் அவருக்கு நற்கதியை கொடுக்கும். நாம தனியா ஆத்மா சாந்தியடையணும்னு வேண்டிக்கத் தேவையில்லை. மாட்சியில் பெரியாரை வியத்தலும் இலமே... சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே... இதுதான் தமிழர் நாகரிகம்.


Nagarajan D
அக் 10, 2024 14:56

இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்? வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும்


Govind Srinivasan
அக் 10, 2024 14:24

திரு ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். மாபெரும் மனித குல சிந்தனையாளர். தொழில் என்பது வியாபாரம் என்று இல்லாமல் சமூகநலன் என்று செயற்பட்டவர். இவரின் பொது நலன், தேச பற்று, தொழிற்சிந்தனைக்கு பாரத் ரத்னா விருதிற்கு அரசு பரிசீலிக்கும் என விரும்புகிறேன்


K Veerappan
அக் 10, 2024 12:04

ரதன் டாடா அவர்கள் மிக சிறந்த தேசியவாதி. நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்தவர். தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை கொடுத்த பண்பாளர். ஓம் ஷாந்தி.


Ramesh Sargam
அக் 10, 2024 12:00

இவரைப்போன்ற ஒரு மனிதரை நாம் பெறுவது கடினம். அன்னாரின் மறைவுக்கு வருந்துகிறேன். அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். ஓம் ஷாந்தி.


ram
அக் 10, 2024 11:15

ஓம் ஷாந்தி


Joseph Lourduraj
அக் 10, 2024 10:46

திரு.ரத்தன் டாடா மிக சிறந்த மனிதர், நாட்டின் மீது மிகுந்த பற்றுடையாளர், நான் மிகவும் நேசித்த மரியாதையைகுறிய மனிதர். அன்னாரது ஆத்துமா நித்ய இளைப்பற்றி அடையாகட்டுவது. முடிவில்லா ஒளி இவர் மேல் ஒளிர்வதாக.


புதிய வீடியோ