உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி அந்த தவறு நடக்காது: நிதிஷ்குமார்

இனி அந்த தவறு நடக்காது: நிதிஷ்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தராரி: 'நான் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அந்தத் தவறை செய்ய மாட்டேன்,' என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.பீஹாரில் 4 சட்டமன்ற தொகுதிகளில், நவ.13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடந்த இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளர் விஷால் பிரஷாந்த்திற்கு ஆதரவாக, மாநில முதல்வர் நிதிஷ்குமார் பேசினார்.அவர் பேசியதாவது:நான் ஏற்கனவே கூறியது போல, மீண்டும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நிரந்தரமாக இருப்பேன். கடந்த காலத்தில் ஆர்.ஜே.டி.,யோடு இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அவ்வாறு செய்ய மாட்டேன்.இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
நவ 10, 2024 08:19

பதவிக்கான பேச்சை மாற்றும் பச்சோந்தி இது எதனை நாள் நிற்குமோ தெரியாது


J.V. Iyer
நவ 10, 2024 05:02

"வயசாச்சுப்பா.. முன்புபோல அணி தாவ தெம்பில்லை. அவர்களுக்கும் என்மீது நம்பிக்கை இல்லை" என்று கூறுகிறார்போலும்.


சோலை பார்த்தி
நவ 09, 2024 22:50

பட்டது போதுமடா சாமி


புதிய வீடியோ