மாநில அரசின் லட்சிய திட்டம் வரும் 26ல் முதல்வர் துவக்கம்
பெங்களூரு: தொழில் அமைச்சர் எம்.பி.,பாட்டீல் நேற்று அளித்த பேட்டி:மாநில அரசின் லட்சிய திட்டமான கே.ஹெச்.ஐ.ஆர்., எனும் அறிவு, சுகாதாரம், புதுமை, ஆராய்ச்சி நகரம் 40,000 கோடி ரூபாய் செலவில் 2,000 ஏக்கரில் கட்டப்படும். முதற்கட்டமாக 500 ஏக்கரில் நகரம் உருவாகும். முதல் கட்டத்தை வரும் 26ம் தேதி, பெங்களூரு விதான் சவுதாவில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். உயிர் அறிவியல், எதிர்கால போக்குவரத்து அமைப்பு, மேம்பட்ட உற்பத்தி மற்றும் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப துறைகளுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பு அமைப்பதே இந்த நகரத்தின் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.