உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டை விட அரசியல் சாசனமே உயர்ந்தது: பி.ஆர்.கவாய்

பார்லிமென்டை விட அரசியல் சாசனமே உயர்ந்தது: பி.ஆர்.கவாய்

அமராவதி: “அரசியலமைப்பே நாட்டின் உச்சபட்சம்; பார்லிமென்ட் உள்ளிட்ட பிற ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் அதன் கீழ் இயங்கும் பிரிவுகள்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.நாட்டின், 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது சொந்த ஊரான மஹாராஷ்டிராவின் அமராவதியில் நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் அதன் கீழ்தான் செயல்படுகின்றன. அரசியலமைப்பை திருத்துவதற்கு தான் பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.ஒருசிலர் பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்பே முதன்மையானது.நிர்வாகம், சட்டசபை அல்லது நீதித் துறை ஆகிய ஜனநாயக அமைப்புகளில் எந்த அமைப்பு உயர்ந்தது என்ற விவாதம் எப்போதுமே இருந்து வருகிறது.அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பதால் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவர் ஆகிவிட முடியாது. ஒரு நீதிபதிக்கு எப்போதும் ஒரு கடமையுணர்வு இருக்க வேண்டும். அவர் பொதுமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விவகாரம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் உள்ளது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும். தன் தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைப்பர் என்பதை கருதி ஒரு நீதிபதி செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் என்ன சொல்வர் என்பது நம் முடிவெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. நான் தனிப்பட்ட முறையில், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலை நிறுத்தியுள்ளேன்.என் தீர்ப்புகள் மற்றும் பணிகள் இதையே காட்டும். நான் ஒரு கட்டட கலைஞர் ஆக விரும்பினேன். ஆனால், என்னை வழக்கறிஞராக பார்க்க என் தந்தை ஆசைப்பட்டார். ஏனென்றால், அவருக்கு வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று கைதானதால், அது முடியாமல் போனது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

C.SRIRAM
ஜூன் 27, 2025 18:11

அப்போது ஏன் அரசியல் சாசனத்தில் இல்லாத நடைமுறை நீதிபதிகள் நியமனத்தில் ?. இப்போதைய நீதிமன்ற தீர்ப்புகள் தரம்குறைந்தும் சர்ச்சைக்குரியாவையாகவும் உள்ளது கண்களுக்கு தெரியவில்லையா ?


venugopal s
ஜூன் 27, 2025 16:16

நல்லா தான் சொன்னீங்க, ஆனால் அவர்களுக்கு உறைக்க மாட்டேன் என்கிறதே!


கண்ணன்
ஜூன் 27, 2025 11:01

ஐயா வக்கீலே, அப்படியெனில் அரசியல் சாசனத் திருத்தங்கள் இவ்வளவு முறைகள் ஏன் எற்பட்டன?


Mohan
ஜூன் 27, 2025 09:51

சரிதான் அய்யா அரசியல் அமைப்பெல்லாம் ஒரு மதத்தினருக்கு மட்டும்தானா அவர்களுக்கு பொருந்தாதா. அவுங்க பெரும்பான்மை ஆகிவிட்டால் இதை மதிப்பார்களா ...


c.k.sundar rao
ஜூன் 27, 2025 09:44

Constitution is supreme no doubt but the constitution is framed and passed by parliament and amendments that are brought are done by parliamentarians, CJI should note it.


Venkatesan Srinivasan
ஜூன் 28, 2025 00:21

Constitution was d by a group of intellectuals under the leadership of Dr. B. R Ambedkar since he was Law Minister at that time. There were many eminent personalities in that group all were equally knowledgeable compared to the leader. Now many claim only the leader of that functional group Dr. Ambedkar himself had drawn the laws. Above that the constituent assembly passed the draft by majority. After which only the "Constitution of Bharat/ India" came to effect. Furthermore it got amended or striked out many obsolete clauses to match with time. For example laws about Information Technology have been constituted in the recent past to which Dr. Ambedkar period intellectuals could have no reference. So the dynamic change in constitution is permanent. Article 370 abrogation is the recent development which would not have been envisaged at the time of creation. Reservation is another aspect which had been introduced as a temporary measure to upbringing of socially weaker section of people. Now it is a main permanent agenda for promoting vote bank politics. Such were the scenarios not envisaged. Politician were expected to relinquish their office when their function or conduct was in question atleast on morale ground. Now that morality is a scarce commodity in politics. That is the fallout to situations Ministers and Chief ministers holding office even while behind the bars. Such was interpretation or misinterpretation of law upheld by the Highest Courts of this country. So now we find flaw with the Parliament for not properly plugging the holes whilst enactment. Indra Gandhi or to that any other Prime minister were not even a eminent personalities in Law who could muster majority to amend or abrogate any law in the constitution. So what is constitution to be very great about? Judiciary is looking upon the constitution passed by parliament for dispensation of justice. So it is evidently clear of the Supremacy.


சமீபத்திய செய்தி