உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜமீருக்கு முற்றும் நெருக்கடி ஒக்கலிகர் போராட்டம்

ஜமீருக்கு முற்றும் நெருக்கடி ஒக்கலிகர் போராட்டம்

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமியை கருப்பர் என்று விமர்சித்த அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு நெருக்கடி முற்றுகிறது.முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், மாநில வீட்டு வசதித் துறை அமைச்சராக இருப்பவர் ஜமீர் அகமது கான். ராம்நகரின் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில், மத்திய அமைச்சர் குமாரசாமியை கருப்பர் என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார்.ஆனால், அவரது பேச்சால் தனக்கு கிடைக்க வேண்டிய ஒக்கலிகர் ஓட்டுகள் பிரிந்து இருக்கலாமென, வேட்பாளர் யோகேஸ்வர் சந்தேகம் தெரிவித்தார். இது காங்கிரசுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.ஜமீர் அகமது கான் முன்பு ம.ஜ.த., கட்சியில் இருந்தவர். குமாரசாமிக்கு நெருக்கமாக இருந்தார். அப்போது 'நிகில் என் மகனைப் போன்றவர்' என, முகநூலில் ஜமீர் அகமது கான் பதிவிட்டு இருந்தார்.அந்த பதிவை தற்போது வெளியிட்டு, மாண்டியா காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று காலை ஜமீர் அகமது கானுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவரை பிரசாரத்திற்கு அழைத்து வந்திருக்கக் கூடாது என்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.இன்னொரு பக்கம் ஒக்கலிக சமூகமும் ஜமீர் அகமது கானுக்கு எதிராக திரும்பியுள்ளது. அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென முதல்வர் சித்தராமையாவுக்கு, ஒக்கலிக தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.ஜமீரை கண்டித்து நேற்று காலை பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் ஒக்கலிக சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இது ஜமீர் அகமது கானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை