உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இவ்வளவு பொய் பேச வேண்டுமா: கவர்னர் வெளியேறியதற்கு காரணம் சொன்னார் சீமான்!

இவ்வளவு பொய் பேச வேண்டுமா: கவர்னர் வெளியேறியதற்கு காரணம் சொன்னார் சீமான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர் : 'இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று எண்ணித்தான் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறி விட்டார்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் வடலூரில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: உங்களுக்கான உரையை நீங்களே எழுதிக்கோங்க என்று சொன்னால் எப்படி எழுதுவீங்க? சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு இடங்களிலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் மது கடைகள் திறந்து இருக்கிறது என்று எழுதி படித்துவிடுவீர்களா? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5w21mjyb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வளவு தூய உள்ளத்தோடு ஆட்சி செய்பவர்களா நீங்கள்? நீங்கள் எழுதி கொடுத்ததை கவர்னர் படிக்க வேண்டும். என்ன இவ்வளவு பொய் பேச வேண்டுமா? என்று நினைத்து கவர்னர் சென்றுவிட்டார். இதே கவர்னர் படித்து இருந்தால் நாங்கள் என்ன நினைப்போம்? அவர் தி.மு.க.,விலேயே சேர்த்துவிடலாம் என்று தான் நினைப்போம். எல்லாருக்கும் தெரியும், அனைத்து இடங்களில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. நான் தலைவர்களை நம்பி வரவில்லை. நான் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும். டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியிலும், பஞ்சாபிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற முடியாதா? முடியாது என்று சொல்கிறார்கள். நான் தனித்து நின்று நிகழ்த்தி காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

CA.S.Karthigeyan
ஜன 10, 2025 10:57

ஓஹோ.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுதிக்கொடுப்பதைத்தான் குடியரசுத்தலைவர் வாசிக்கிறாரோ ?


Selva Kumar
ஜன 10, 2025 07:52

தைரியத்துடன் பொய்கள் நிறைந்த இந்த உரையை நான் பட்டிக்காட்டான் என கூறி வெளிநடப்பு செய்திருக்கலாமே?


Sankar Govindan
ஜன 09, 2025 10:07

சம்பளம் தருவது மாநில அரசு, என்ன ஒப்பற்ற கருத்து. நம்மிடம் சம்பளம் பெறும் ஊழியர், நமது குடும்ப உறுப்பினர்கள் இவர்களையே பொய் சொல்ல நிர்பந்திக்க முடியாது. ஆளுநர் மாநிலத்தின் முதல் குடிமகன். முதல் குடிமகன் என்றால் அர்த்தம் தெரியுமா?.


அப்பாவி
ஜன 08, 2025 22:44

ஆளுனருக்கு சம்பளம் தருவது மாநில அரசு. ஞாபகம் இருக்கட்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜன 09, 2025 05:20

பேச்சுரிமை கூட இல்லாத மாநிலமா தமிழகம் ? கவர்னருக்கே பேச்சுரிமை மறுக்கப்படும் மாநிலத்தில் பொதுமக்களின் பேச்சுரிமை எந்தளவு இருக்கும் ?


Ganapathy
ஜன 09, 2025 05:32

திராவிட அறிவிலிகள் இந்தப் பொய்யை பல காலமாக பரப்பி வருகின்றனர்.


Vasoodhevun KK
ஜன 09, 2025 08:57

சட்ட சபையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்பிறகு அந்த மாநில பாடல் இசைக்கப்படும். இதையடுத்து கவர்னர் உரை நிகழ்த்திய பிறகு இறுதியில் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் இசைக்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் இது கடை பிடிக்கப்படுகிறது.இதுதான் மரபும் விதியும். உங்க ஆளுக்கு சம்பளம் எங்கள் வரிப்பணம். அதை நீங்க ஞாபகம் வச்சுக்கவும்.


சாண்டில்யன்
ஜன 09, 2025 09:39

பேச்சுரிமை இல்லாமையா ஊரூரா போயி ஒளறிக்கிட்டு இருக்காரு?


மாயவரத்தான்
ஜன 09, 2025 10:25

மாநில ஆட்சியாளர்களுக்கு சம்பளம் தருவது மக்கள் ஞாபகம் இருக்கட்டும்


அப்பாவி
ஜன 08, 2025 22:43

அதுவே உண்மையா இருக்கடும். அதுக்குன்னு தேசிய கீதம் அவமானபடுத்தப் பட்டதுன்னு நொண்டி சாக்கு சொல்வது கெவுனருக்கு அழகல்ல. ஒருற்றன் கிட்டேயும் உண்மை நேர்மை இல்லை.


Ramesh Sargam
ஜன 08, 2025 22:01

இனி கவர்னர் பேசவேண்டியதை அவரே தயாரித்து பேசவேண்டும். அரசு எழுதிக் கொடுப்பதை வாந்தி எடுக்கவா கவர்னர் பதவி?


sundarsvpr
ஜன 08, 2025 16:45

ஆளுநர் உரை என்றால் அவர் வாசிக்கவேண்டும். அவர் எழுதாத உரையை ஏன் படிக்கவேண்டும். அரசு பொய் சொல்லலாம் இதற்கு தேர்தலில் மதிப்புஅளிப்பார்கள். தமிழக தலைமை அமைச்சர் சட்டமன்றத்தில் எழுதி வைத்ததை பார்த்து பதில் சொல்கிறார். அவர் மாற்றி பதில் சொல்லலாம் என்றால் ஆளுநர்க்கு இந்த தகுதி கிடையாதா?


சாண்டில்யன்
ஜன 08, 2025 19:21

INCORRIGIBLES


S Srinivasan
ஜன 08, 2025 16:32

Absolutely you are right mr seeman


Suppan
ஜன 08, 2025 16:13

கள்ளச்சாராயம், கஞ்சா வளர்ப்பு , போதைப்பொருள் விநியோகம் ஆகிய வேலைகளையும் சேர்த்தா ?


baala
ஜன 08, 2025 15:46

இந்த தளத்தில் எழுதும் நபர்கள் எவ்வளவு பேர் நேர்மையுடன் எழுதுகிறார்கள் என்பதை மனசாட்சியுடன் எண்ணி பார்க்கலாமே


புதிய வீடியோ