உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: வாட்டிய வெயிலுக்கு காரணம் இது தான்!

124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: வாட்டிய வெயிலுக்கு காரணம் இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில், கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம், முடிந்த 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.கடந்தாண்டு நாடு முழுவதும் வெயில் வாட்டியது. பெரும்பாலான மாநிலங்களில் பகல் நேர வெப்பம் புதிய உச்சங்களை எட்டியது. இது தொடர்பாக, புதுடில்லியில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:இந்தியாவில் 1901ம் ஆண்டு முதல் இதுவரையிலான பதிவுகளின் அடிப்படையில், முடிந்து போன 2024ம் ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவான ஆண்டாக உள்ளது. கடந்தாண்டு வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை, நீண்ட கால சராசரியை விட 0.90 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஐரோப்பிய காலநிலை ஏஜென்சி தகவலின்படி, கடந்த ஆண்டு பதிவில் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. 2024ம் ஆண்டில் உலகம் சராசரியாக 41 நாட்கள் ஆபத்தான வெப்பத்தை அனுபவித்ததாக காலநிலை விஞ்ஞானிகளின் குழுக்களின் அறிக்கை கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bahurudeen Ali Ahamed
ஜன 07, 2025 13:14

அரசாங்க நிலங்களில் சாதகமுள்ள இடங்களில் மரங்கள் வளர்க்க மத்திய மாநில அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்


veeramani
ஜன 02, 2025 09:40

மய்ய அரசின் விஞ்ஞானியின் கருத்து ....உலகின் மக்கள் பெருக்கம் அதிகரித்துகொண்டுசெல்கிறது. மரங்கள் வெட்டப்படுகின்றன . இயற்கையின் மரங்கள் மனிதன் வெளியிடும் கார்படிஒக்ஸிடே இழுத்துக்கொண்டு ஒஸ்க்சிஜனாக வெளியற்றுகிறது. மேலு மனிதனுக்கு உதவிசெய்யும் இயந்திரங்கள் அதிக அளவு கார்போன் டி ஆக்ஸிடே வெளியிடுகிறது. இது வளிமண்டலத்தில் ள்ள ஒஸ்யோனே படலத்தை பாதிக்கிறது. இதனால் நமது பூமி வெப்பமயமாக்கப்படுகிறது . காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது . இதை கண்காணிக்க சுமார் பாத்து வருடங்கள் தேவை


Ahmed
ஜன 02, 2025 08:57

CAPTION AND REASON NOT MENTIONED IN THE CONTENT


DRK
ஜன 02, 2025 07:07

காரணத்தைத் தேடித்தேடி மண்டை காஞ்சதுதான் மிச்சம்.


மோகனசுந்தரம் லண்டன்
ஜன 02, 2025 00:44

காரணம் இது தான் என்றால் எது?


ديفيد رافائيل
ஜன 01, 2025 22:15

அது சரி நீங்க என்ன reason னு போடவே இல்லை. ஒருவேளை இயற்கை மற்றும் கனிம வளங்களை அழித்ததாக இருக்குமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை