உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைபர் தாக்குதல்களை முறியடிப்பதின் அவசியம்; கற்று கொடுத்தது ஆப்பரேஷன் சிந்தூர்!

சைபர் தாக்குதல்களை முறியடிப்பதின் அவசியம்; கற்று கொடுத்தது ஆப்பரேஷன் சிந்தூர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ''சைபர் தாக்குதல்களை முறியடிப்பதை ஆப்பரேஷன் சிந்தூர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அதனை தடுக்க உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அடைந்து இருப்பதை ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிரூபித்துள்ளது. சைபர் தாக்குதல்களை முறியடிப்பதன் அவசியத்தை ஆப்பரேஷன் சிந்தூர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் வெற்றியை ஆப்பரேஷன் சிந்தூர் நிரூபித்தது. வரும் காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஜெட் இன்ஜின்கள் உருவாக்குவதற்கு நாம் வேகமாக செயல்பட்டு வருகிறோம். தொழில்நுட்பம் மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போர்கள் நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி விண்வெளி சைபர் ஸ்பேஸிலும் விரிவடைகின்றன. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !