வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிக்கலான தொழில்நுணுக்கம்... ஆகவே தவிர்க்க முடியாது.
புதுடில்லி, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி, டிசம்பரில் மூன்றாவது முறையாக நேற்றும் முடங்கியதால், பயனர்கள் அவதி அடைந்தனர்.நாடு முழுதும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, தட்கல் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற ஆயிரக்கணக்கான பயனர்கள், முன்பதிவு செய்ய முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.பெரும்பாலானோர், இணையதளத்திற்குள் செல்ல முடியாமலும், மொபைல் போன் செயலியில் லாக் - இன் செய்ய முடியாமலும் அவதிப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த பயனர்கள், சமூக வலைதளங்களில் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். பயனர் ஒருவர் கூறுகையில், 'காலை 10:00 மணிக்கு தட்கல் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றேன். 'ஆனால் இணையதளம் வேலை செய்யவில்லை. வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு கேட்ட போது, இணையதளம் பராமரிக்கப்படுவதாக தெரிவித்தனர். வேலை நேரத்தில் யாராவது இணையதளத்தை பராமரிப்பார்களா?' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.டிசம்பரில், ஐ.ஆர்.சி.டி.சி., இதுபோன்ற இடையூறுகளை எதிர்கொள்வது இது மூன்றாவது முறை. டிச., 26ல், பராமரிப்பு காரணமாக இணையதளம் மற்றும் மொபைல் போன் பயன்பாடு, ஒன்றரை மணி நேரம் தடைபட்டது. டிச., 9ல், இணையதளம் ஒரு மணி நேரம் செயலிழந்ததால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயனர்கள் சிரமப்பட்டனர்.
சிக்கலான தொழில்நுணுக்கம்... ஆகவே தவிர்க்க முடியாது.