உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடைசி பெஞ்ச் என்பது இனி இல்லை; கேரளா பள்ளிகளில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்த படம்!

கடைசி பெஞ்ச் என்பது இனி இல்லை; கேரளா பள்ளிகளில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்த படம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியான ''ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்'' என்ற படத்தின் எதிரொலியாக, பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைசி பெஞ்ச் என்பது இல்லாத வகையில் அரைவட்ட வடிவில் மாணவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்.வினேஷ் விஸ்வநாத் இயக்கிய படம் தான் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். இந்த படத்தில் கிராமப்புற கேரளாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளித் தேர்தலை மையமாகக் கொண்டு படம் இயக்கப்பட்டு உள்ளது. மாணவர்களிடையே நடக்கும் சண்டைகள், நட்புறவின் எளிய மகிழ்ச்சிகள் மற்றும் அவ்வப்போது ஏற்படும் மோதல் தருணங்கள் ஆகியவை நுணுக்கமான பார்வையுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளன.வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவர். முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் இருப்பது வாடிக்கை. இத்தகைய வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படுவதை இந்தப் படம் வலியுறுத்தியது அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துவார் என்பது, இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும்.படம் வெளியான நிலையில், மாணவர்களின் இருக்கை முறை தொடர்பான அதன் கருத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதன்படி இதுவரை கேரளாவில் 6 பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடைசி பெஞ்ச் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத் கூறியதாவது: கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் இந்த வகுப்பறை உட்கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.குறைந்தது 6 பள்ளிகள் ஏற்கனவே இதை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் அவர்கள் எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்தபோது நாங்கள் அதைப் பற்றி அறிந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்விவி மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய மாற்றத்தை அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து மேலும் 5 பள்ளிகள் செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இத்தகைய இருக்கை முறை மாற்றம் என்பது, புதியது இல்லை. கடந்த 1994ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்பக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல் செய்ய அறிவுறுத்தியது. எனினும் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் எவரும் முன்வரவில்லை. இப்போது திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேரளப் பள்ளிகளில் இத்தகைய மாற்றம் அமலுக்கு வர தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ram pollachi
ஜூலை 09, 2025 22:59

சினிமா தியேட்டரில் பா வடிவில் அமர்ந்து பார்க்குமாறு ஏற்பாடு செய்யுங்கள். படிக்கிற ஆர்வம் உள்ள குழந்தைகள் எங்கு அமர்ந்தாலும் படிக்கும் இந்த கூத்தாடி பின்னால் போனால் எல்லாம் நாசமாகி விடும்.


Suppan
ஜூலை 09, 2025 16:31

வகுப்பறை உபயோகம் குறையும். ஒரு சதுர மீட்டருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்களையே அமர வைக்க முடியும். முன்பக்கம் ஒரு திரை பக்க வாட்டிலும் இரண்டு திரைகளை அமைத்தால் மாணவர்களுக்கு கழுத்து வலி வராது. ஒரு திரை வைப்பதற்கே பணம் இல்லாத நிலையில் இது சாத்தியமில்லை. பணக்காரப்பள்ளிகளுக்கு இது சரி


Jocker Political
ஜூலை 09, 2025 15:17

Better Kids back / Neck needs to correct position .. Any Safety officer or health team needs to approve also.. Bcoz board or teacher not in central position...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 09, 2025 13:41

இங்கு பள்ளியில் மாற்றங்களை கொண்டுவரமுடியாது ...அது அரசிற்கு நல்லதல்ல .ஆனால் டாஸ்மாக்கில் நவீன மாற்றங்களை கொண்டுவரலாம் .. மது ஆர்வலர்களை அமர்ந்து கழுத்து வலியில்லாமல் குடிக்க மேஜை நாற்காலிகளை அமைக்கலாம் ..அவர்களை அழைத்துவர இலவச பீடர் பஸ் விடலாம் , வீடுகள்தோறும் சென்று மதுவின் நன்மைகளையும் எடுத்து கூறி .புதிய மதுபிரியர்களை உருவாக்கலாம் ...டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கலாம் ..


குரு, நெல்லை
ஜூலை 09, 2025 13:04

மத்திய அரசுக்கு எதிரே வித்யாலயா புள்ளிகளில் பல வருடங்களாக மாணவர்கள் தங்கள் பெஞ்சிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை மாற வேண்டும் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் புதிய மாணவர்களை தங்களது அருகில் அமர வைக்க வேண்டும் இதுவே சிறந்த கொள்கையானது அற்புதமான கொள்கையை இந்த திராவிட மாடல் அரசு பின்பற்றுமா


குரு ,நெல்லை
ஜூலை 09, 2025 12:50

பொதுவாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறு முதல் 8 பென்சுக்குள் வரை உள்ளது வாரத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு பெஞ்சில் உள்ள மாணவர்களும் அடுத்த பெஞ்சுக்கு மாற வேண்டும் இது கட்டாயம் இது மிக அற்புதமான திட்டம். இடம் மாறி அமரும் வழக்கமானது வாரத்திற்கு ஒருமுறை என்று தொடங்கி நான்கு வாரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெஞ்சில் உட்கார வைக்கப்படுவர் இந்த திட்டத்தினை பாலோ செய்யலாம்


தஞ்சை மன்னர்
ஜூலை 09, 2025 12:14

இது மாணவ மாணவியருக்கு கழுத்து வலியை கொடுக்கும் போர்டு பார்த்து நேராக அமர்ந்தால் மட்டுமே கழுத்து எலும்பு தேயாமல் இருக்கும் இல்லாத பட்சத்தில் அவர்கள் அமர்ந்து இருக்கு பொஷிஷன் இருந்து கழுத்தை திருப்பி ஒரே திசை யில் பார்க்கும் பொது கழுத்து எலும்பு தேய்மானம் நரம்பு சுளுக்கு எனப்படும் சிக்கல் வர வாய்ப்பு இருக்கு சிறுவர்களுக்கு உடனே பாதிப்பு தெரியாது நாள் பட பட இது பெரிய பிரச்சினை கொடுக்கும் மூன்று மணி நேர சினிமாவில் இதெல்லாம் காட்ட மாட்டார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 11:59

அரை வட்ட வகுப்பறைகள் கட்டும் காண்ட்ராக்ட் முழுக்க வட்ட மாவட்டங்களுக்கே ஆதாயம். அவ‌ர்க‌ள் கட்டவிருக்கும் சீலிங் தலையில் விழாமலிருக்க மாணவர்களுக்கு விலையில்லா ஹெல்மட் வழங்கும் திட்டத்திலும் அவர்களுக்கே கட்டிங்.


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 09, 2025 11:27

மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படாமல் இருக்க வேண்டும்


NAGOOR ANDAVAN
ஜூலை 09, 2025 11:09

இந்த முறையை சரியானது என்று சொல்ல முடியாது. வருடம் முழுவதும் ஆசிரியரையே நோக்கி கழுத்தை திருப்பி இருக்க வேண்டும் என்றால், அது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


முக்கிய வீடியோ