உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1971 ல் இருந்த சூழ்நிலை வேறு; இப்போதுள்ள சூழ்நிலை வேறு: காங்.,க்கு சசி தரூர் பதில்

1971 ல் இருந்த சூழ்நிலை வேறு; இப்போதுள்ள சூழ்நிலை வேறு: காங்.,க்கு சசி தரூர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா தலைமையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், 1971 ம் ஆண்டு, 2025ம்ஆண்டு சூழ்நிலையும் வெவ்வேறானவை எனக்கூறியுள்ளார்.

விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ், 1971ம் ஆண்டு நடந்த போரின் போது, பிரதமராக இருந்த இந்திரா புகைப்படத்தை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்து இருந்தது. இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்து இருந்தது.

பயங்கரவாதிகளுக்கு பாடம்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம், கட்டுப்பாட்டை தாண்டி சென்று விடக்கூடாது என்பது எனது எண்ணம். நமக்கு அமைதி முக்கியம். 1971 ல் இருந்த சூழ்நிலை, 2025ம் ஆண்டில் கிடையாது. நிறைய வேறுபாடு உள்ளது.இந்திய மக்களுக்கு அமைதி நிலவுவது முக்கியம். பூஞ்ச் மாவட்டத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை அங்கு வசிப்பவர்களிடம் கேட்க வேண்டும். போரை நாம் நிறுத்த வேண்டும் என நான் கூறவில்லை. போரை தொடர்வதற்கான காரணம் இருந்தால் அதனை நாம் தொடரலாம். ஆனால், தற்போது நடந்ததை தொடர்வதற்கு அது போர் கிடையாது. பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க நினைத்தோம். அந்த பாடம் கற்பிக்கப்பட்டு விட்டது.

அமைதி முக்கியம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும் என்று நான் நம்புகிறேன். இது ஒரே நாளில் நடக்காது. இதற்கு ஒரு மாதம் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், அதனை செய்ய வேண்டும். அப்பாவி இந்திய மக்களை கொன்றவர்களை தப்ப விடக்கூடாது. ஆனால், இதற்காக, நாட்டை அச்சுறுத்தலில் தள்ளும் வகையில் நீண்ட கால போரில் ஈடுபட வேண்டும் என்பதற்கு அர்த்தம் கிடையாது. பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தலில் ஈடுபடுத்துவது சரி கிடையாது. இந்திய மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும. இந்த தருணத்தில் அமைதி நிலவுவது முக்கியமானது.

வெவ்வேறானவை

1971 ம் ஆண்டு இந்த துணைகண்டத்தின் வரைபடத்தை முன்னாள் பிரதமர் இந்திரா மாற்றியமைத்தார். ஆனால் சூழ்நிலை வேறாக இருந்தது. இன்றைய பாகிஸ்தானில் வேறு சூழ்நிலை உள்ளது. அவர்களிடம் உள்ள தளவாடங்கள், ராணுவ தளவாடங்கள், அவர்களால் செய்ய முடஇயும் பாதிப்புகள் அனைத்தும் வெவ்வேறானவை. இவ்வாறு சசிதரூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Anbalagan A
மே 12, 2025 20:31

பாவம் சசி தரூர் அவரென்ன செயவார்? சுனந்தா சந்தேக மரண வழக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி திருவனந்தபுரத்திலும் சல்வாக்கு சரிந்து விட்டது. அடுத்த முறை காங்கிரசு சீட்டு தரும் என்னவோ? பதவி இல்லாமலும் இருக்க முடியாது. எனவே தான் காவியிடம் துண்டு போட்டு வைக்கிறார்


Mehrudeen Mehrudeen
மே 12, 2025 10:10

அப்போ இருந்த படை வேறு. இப்போ வேறு. பலம் கூடி இருக்கிறது.


K.Uthirapathi
மே 12, 2025 00:21

மைமுன் பீவி இந்திரா ஃபெரோஸ் கான் காலத்திலிருந்தே இந்தியா PAK கிற்கு ஆதரவாகவே செயல்பாட்டது. தனது சித்தப்பா முஜிபுர் ரஹ்மானுக்காகத்தான் 1971ல் மைமுன்பீவி PAK உடன் போர் தொடுத்தார். யாரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. எனக்கு நேரடியாக தெரிந்த விஷயம்.


kumar
மே 11, 2025 21:41

இந்த மாதிரி கேவலமான கருத்து எழுத்துவதற்கு நீங்களும் , கருத்து சொல்வதற்கு உங்கள் கோமாளி தலைவர்களும் பாகிஸ்தானுக்கே குடிபோகலாம் அல்லது பாகிஸ்தானின் செய்தியாளர்கள் என்று ஆகிவிடலாம்


Dharmavaan
மே 11, 2025 19:09

பச்சோந்தித்தனமான பேச்சு பேச்சு வார்த்தை என்றால் தீவிரவாதிகளை ஒப்படைப்பதை கண்டிஷன்போடலாம் . நம் வீரரை ஒப்படைக்க வேண்டும் ஆக்கிரமிப்பு காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் .அதை விடுத்தது நாம் தேடுவது எல்லாம் அப்புறம் இந்திரா காந்தி போலவே செய்கிறான் பேசுகிறான்


Narasimhan
மே 11, 2025 19:03

காங்கிரஸ் காரனுக்கு தெரிந்ததெல்லாம் தீவிரவாதியை விருந்தினர் போல் உபசரித்து மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக மாப்பிள்ளையை போல் கவனிப்பதுதான். மண்டையை அங்கு வைத்துக்கொண்டு முண்டம் மட்டும் இங்கு வைத்துக்கொண்டு திரியும் கூட்டம்.


abdulrahim
மே 11, 2025 18:50

இதுக்கு நீ பாஜக உறுப்பிராக ஒளிவு மறைவு இன்றி மாறிவிடலாம் ,ஜால்றா தட்ட ஒரு அளவு வேண்டும், இந்தியாவின் இரும்பு மங்கையோடு போட்டோ சூட் காகவும் தேர்தலுக்காகவும் செயலாற்றும் ஒருவரை உன்னால் ஒப்பீடு செய்ய முடிகிறது என்றால் உன்னை ஏன் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்பதற்கு காரணமே உன் சுயநலம்தான், இன்னைக்கி நீங்க திடீர் நல்லவன் ஆயிட்டார் போல


ஆரூர் ரங்
மே 11, 2025 19:20

சுயநலத்துக்காக, பதவி வெறிபிடித்து அவசரநிலை கொடுமையை நிகழ்த்தின சர்வாதிகாரி பெண்மணியை எந்நேரமும் நாட்டுக்காகவே வாழும் மாமனிதர் மோதியுடன் ஒப்பிட வெட்கமாக இல்லையா?.


Rathna
மே 11, 2025 18:34

2014 க்கு முன்னால் வருடத்திற்கு எத்தனை முறை தீவிரவாத தாக்குதல் நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்போதைய உள் துறை அமைச்சரே காஷ்மீர் செல்ல பயமாக உள்ளது என்று சொன்னதை நினைவு கூறவும். காஷ்மீர் இளைஞர்களின் முழு நேர தொழிலே கல் எரிவதாக இருந்தது. ஜிஹாதிகள் உள்நாட்டு வோட்டுக்கு பயந்து நடவடிக்கை எடுக்காத காலம் அது.


Palanisamy T
மே 11, 2025 18:17

பெரிய மனத்தோடு சூழ்நிலைப் பற்றி பேசியுள்ளீர்கள் அன்றைய சூழ்நிலையில் இந்தியா உதவிக் கரம் மட்டும் நீட்டியிராமல் இருந்திருந்தால் இன்று வங்கதேசமுமில்லை, வங்கதேச மக்களுமில்லை. சர்வாதிகார ஆட்சியின் கீழ் அன்று பாகிஸ்தான் ராணுவம் அங்கு நடத்தியது இன அழிப்புபோர். அவர்களை அன்று காப்பாற்றியது இந்தியா. அந்த நன்றியை இன்று இந்தியாவிற்கு எதிரான வங்கதேச அரசு ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டிவிட்டார்கள். அன்று 1971-ல் நடந்ததை இவர்கள் மறந்துவிட்டார்களா?இவர்கள் என்றும் இனி மாறப் போவதுமில்லை . மாறவும் மாட்டார்கள், அவர்கள் அன்று படித்த பாடம் அப்படி இன்றும் படிக்கின்ற பாடம் அப்படி


veeramani hariharan
மே 11, 2025 18:11

Very much matured reply by Mr.Sashi Tharoor


முக்கிய வீடியோ