உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.டில்லியில் பா.ஜ., மகளிர் அணி சார்பில், பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், ராணிவேலு நாச்சியாரின் வாழ்க்கை, பொற்காலமாக உள்ளது. தைரியத்திற்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய முதல் அரசி ஆவார்.ராணிவேலுநாச்சியார், மக்களுக்கு ஆதரவான ஆட்சியாளர் ஆக இருந்தார். அத்துடன், உண்மையான தலைமைத்துவம் என்பது, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதில் இல்லை. அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடுவதில் உள்ளது என்பதை தனது தைரியம் மற்றும் தலைமைப் பண்பு மூலம் நிரூபித்தார்.தமிழகத்தில், ராணி வேலு நாச்சியாருடன், ராணி மங்கம்மாளும் சிறந்த பெண் ஆட்சியாளராக இருந்தார். அவர் தனது ஆட்சியை காத்ததுடன், ஏராளமானமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.அவர் உள்கட்டமைப்பு திட்டத்தில் ஏராளமான முதலீடு செய்தார். சாலைகள் அமைப்பதிலும் , மக்களுக்கு சுத்தமான குடிநீர்வழங்குவதிலும் கவனம் செலுத்தினார். நெடுஞ்சாலை கட்டமைத்த பெருமை அவருக்கு உள்ளது.பெண்களிடம் உள்ள சகிப்புத்தன்மை , இரக்கம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் வலிமை எந்த ஒரு போராட்டத்திற்கும் தார்மீக உயர்வை அளிக்கும் என மஹாத்மா காந்தி நம்பினார். அஹிம்சை இயக்கத்தின் மையமாக பெண்களை மாற்றினார்.சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு ஆகிய போராட்டங்களில் பெண்கள் பங்கேற்ற போது அது தேசிய அளவிலான இயக்கமாக மாறியது. அனைத்து வீடுகள், வீதிகள் மற்றும் கிராமங்களில்இந்த போராட்டங்கள் நடந்தன.பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மஹாத்மா காந்தி ஊக்கமளித்தார். இதனால், சரோஜினி நாயுடு உள்ளிட்ட ஏராளமான பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்பு காரணமாக சுதந்திர போராட்டம் மாபெரும் இயக்கமாக மாறியது.நாட்டின் வரலாற்றை பார்த்தால், பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கேற்கும் போது, புதிய இந்தியா உருவாகிறது.சிலர் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகள் தொடர்பாக சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். ஹிந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் பெருமையை பாதுகாக்க பா.ஜ, பணியாற்றி வருகிறது. காசிதமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஹிந்தி உள்ளிட்ட எந்தவொரு இந்திய மொழிகளும் ஒன்றுக்கு ஒன்று போட்டி அல்ல. அவற்றுக்கு இடையே ஒற்றுமை உள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் ஹிந்தி பலப்படுத்துகிறது. அனைத்து இந்திய மொழிகளில் இருந்து ஹிந்தி பலன்பெறுகிறது. மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Matt P
மார் 31, 2025 09:54

விரும்புகிற மொழியை தான் படிக்க சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி தவிர எந்த மொழியாகினும் எங்கள் பிள்ளைகள் படிப்பார்கள் என்று அப்பனாகிய நான் சொல்கிறேன் என்று சொல்வதற்கு திராணி வேண்டுமே. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்த மொழியையும் படிக்க விட மாட்டோம் என்று சொல்வது திமிர். படிக்க படிக்க விஷயங்கள் தெரிய தெரிய மூளை பலன் தான் தேறும். அதனால் தான் புத்தி சகல சக்தி என்றார்கள்.


Barakat Ali
மார் 30, 2025 21:30

வேலு நாச்சியார் திப்புவுக்கு அடிமையாக இருக்க விரும்பி வெள்ளையர்களை எதிர்த்தவர் ......


Sampath Kumar
மார் 30, 2025 12:01

அரசியில் வரலாறு தெரியாமல் சும்மா பிதற்றுகிறார்


Sampath Kumar
மார் 30, 2025 12:00

இந்த நாடு என்பதே மொழியின் அடிப்படியில் தானே பிரித்து உள்ளது


Matt P
மார் 31, 2025 12:53

மொழியின் அடிப்படையில் பிரிந்ததால் தான் இப்படியெல்லாம் ஆட முடிகிறது தமிழ்நாட்டில் தி. கட்சிகள். ஒரு வேளை அப்படி பிரிக்காமல் இருந்திருந்தால் பொழைப்புக்கு என்ன செய்திருப்பாங்களோ.


venugopal s
மார் 30, 2025 11:26

நீங்கள் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்து ஆள்வது மட்டும் சரியா?


Dharmavaan
மார் 30, 2025 08:33

இது போல் மொழி பிரிவினை பேசும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் .அதுவே நாட்டிற்கு நல்லது


Iyer
மார் 30, 2025 07:55

நீதித்துறையில் உள்ள ஊழலை அகற்றி - நீதிபதிகள் என்ற பெயரில் உலவிவரும் திருடர்களை கைது செய்ய சட்ட திருத்தும் கொண்டு வாருங்கள். பப்பு, அகிலேஷ், மம்தா, சித்தராமைய ஸ்டாலின் போன்ற ஊழல் பெருச்சாளிகளை FAST TRACK COURT கள் மூலம் உள்ளே தள்ளுங்கள்


Iyer
மார் 30, 2025 07:47

இப்படியெல்லாம் ADVICE கொடுத்தால் கேட்டு நடக்கும் கட்சி அல்ல DMK. CBI, ED மற்றும் புலனாய்வு நிறுவனங்களை முடுக்கி விட்டு தப்பிக்க முடியாதபடி FIR போடுங்கள். கெஜ்ரிவால் மந்திரிசபை போல் - ஸ்டாலின் சேர்த்து எல்லா அமைச்சர்களையும் உள்ளே தள்ளுங்கள். போலி தமிழ் பற்று, போலி திராவிட பற்று எல்லா பனி போல்


ஜான் குணசேகரன்
மார் 30, 2025 07:18

திராவிடம் என்ற சித்தாந்தம் இன வழி, மொழி வழி, மத வழி, ஜாதி வழி சிந்தனையை அடிப்படையாக கொண்டது. இந்த மாதிரியான பிரிவினை கோட்பாடுகள் தான் திராவிட சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதனால் திமுக திராவிடத்தையும் மூல சிந்தனையையும் கைவிட முடியாது.


இந்தியன்
மார் 30, 2025 03:41

மாநில மொழி வேண்டும்...உலக மொழி வேண்டும்...ஆனால் தேசிய மொழி வேண்டாம்... என்னே ஒரு தேசப் பற்று... வாழ்க தமிழ்நாடு...வளர்க வெளிநாடு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை