உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முக அறுவை சிகிச்சை செய்தவர் பலி

முக அறுவை சிகிச்சை செய்தவர் பலி

மங்களூரு, : கன்னத்தில் இருந்த சிறிய கட்டியை அகற்ற, அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தார்.மங்களூரு உல்லால் அக்கரகெரே பகுதியை சேர்ந்தவர் முகமது மசின், 32. தனியார் நிறுவன ஊழியர். இவரது கன்னத்தில் சிறிய கட்டி இருந்தது. இதை அகற்றுவதற்காக, தனியார் முக அறுவை சிகிச்சை மையத்தில், சில தினங்களாக சிகிச்சை பெற்றார்.அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்ற வேண்டும் என, சிகிச்சை மைய ஊழியர்கள் கூறினர்.நேற்று காலை அறுவை சிகிச்சைக்காக, ஒரு அறைக்கு முகமது மசின் அழைத்துச் செல்லப்பட்டார். அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்று கூறினர்.ஆனால் மாலை ஆன பின்னரும், அறுவைச்சிகிச்சை அறையில் இருந்து முகமது மசினை அழைத்து வரவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறுவை சிகிச்சை மைய ஊழியர்களிடம் விசாரித்தபோது, முகமது மசின் உடல்நிலை ஏற்ற, இறக்கமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறினர்.அதன்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். முக அறுவை சிகிச்சை மையம் மீது, கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

s sambath kumar
செப் 27, 2024 17:31

மயக்க மருந்து எவ்வளவு அளவு கொடுக்கவேண்டும் என்று தெரியாத நாய்கள் எல்லாம் டாக்டர் என்ற பேருடன் உலாவிக்கொண்டு இருக்கின்றன. அதன் விளைவு தான் இந்தக் கொடூரம்


சமீபத்திய செய்தி