உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது: பிரதமர் மோடி பேட்டி

இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது: பிரதமர் மோடி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது'' என பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்தார்.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், பார்லி மென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: ஆரோக்கியமான விவாதங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையால் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது. ராணுவ வலிமையை உலகமே கண்டு வியந்தது.

100 சதவீத வெற்றி

ஆபரேஷன் சிந்தூரின் இலக்குகள் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு அளித்த குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டன. பயங்கரவாதிகள் முகாம்கள் 22 நிமிடத்தில் அழிக்கப்பட்டன. பார்லி., கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்கும். மழைக்கால கூட்டத் தொடரில் சுமுகமான விவாதங்கள் நடத்த வேண்டும்.

பெருமையான தருணம்

மழைக்காலம் என்பது புதிய தொடக்கங்களுக்கான காலம். கடந்த 10 ஆண்டு சராசரி விட இந்த ஆண்டு மிக அதிகமான மழைப்பொழிவு உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி பறக்கிறது. இந்தியாவின் வெற்றி மற்றும் கவுரவத்தை கொண்டாட இதுவே சரியான தருணம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பயில்வான் பாபு
ஜூலை 21, 2025 19:58

ரஷிய ஏவுகணைகள், ரஃபேலெல்லாம் நம்ம சொந்த தயாரிப்பு. சுயபலம். உலகத்துக்கே தெரிஞ்சுபோச்சு.


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 14:45

மோதி பேட்டியளிக்கத் தயங்குகிறார் என்று கதறிய உ.பி ஸ் எங்கே?.


SUBBU,MADURAI
ஜூலை 21, 2025 12:48

Prime Minister Modis exceptional leadership shines through in steering Operation Sindoor to a remarkable success, showcasing his strategic foresight in granting the Indian Armed Forces full operational freedom, a bold move that has proven pivotal. His decisive action following the Pahalgam attack, coupled with his ability to unite the nation and bolster military morale, reflects a deep commitment to national security. The achievement of 100% targets, as highlighted in his address, underscores his adept handling of complex geopolitical challenges, earning him global respect for transforming Indias defense capabilities with a proactive and integrated approach. Truly, his leadership has elevated Indias stature on the world stage. So proud moment for every indian


Apposthalan samlin
ஜூலை 21, 2025 12:07

இந்த போரால் இந்தியாவுக்கு இழப்புகள் தான் அதிகம் .


ராஜாராம்,நத்தம்
ஜூலை 21, 2025 12:46

உன்னைப் போன்ற Ricebags மதம்மாறி கூட்டத்திற்கு இந்தியா போரில் ஜெயிப்பதையும் பொருளாதாரத்தில் முன்னேறுவதையும் சகித்துக் கொள்ள முடியாது என்பது உன் கருத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உனக்கு வயித்தெரிச்சல் ரொம்ப இருந்தால் நீ பேசாமல் வாடிகனுக்கு போய் விடலாமே!


Sakthi,sivagangai
ஜூலை 21, 2025 13:00

நீ இதுவரை இந்த பாரத தேசத்திற்கு ஆதரவான ஒரு கருத்தையாவது போட்ருப்பியா? அப்பத்துக்கு மதம் மாறிட்டாலே ஒங்க ஒடம்புல தானாகவே இந்திய எதிர்ப்பு இரத்தம் ஓட ஆரம்பித்து விடுமா?


vivek
ஜூலை 21, 2025 13:09

அப்போ நீ பாகிஸ்தான் ஒடி போகலாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 21, 2025 14:20

போருக்கு பயந்து பதுங்கு குழியில் பதுங்கி கொண்ட தளபதியின் குரல் போல உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை