பீங்கான் கழிவுகளில் உருவான உலகின் முதல் பூங்கா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உலகிலேயே பீங்கான் கழிவுகளில் இருந்து உருவான முதல் பூங்கா, உத்தர பிரதேசத்தில் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா என்ற பகுதி, பீங்கான் பொருட்களின் தலைநகரமாக விளங்குகிறது. இப்பகுதியில் தயாரிக் கப்படும் பீங்கான் பொருட்கள், உலகளவில் பிரபலமானவை. குர்ஜா என்றாலே பீங்கான் தான் அனைவரது நினைவுக்கு வரும். இந்நிலையில், வீணாகும் பீங்கான் கழிவுகளில் இருந்து பூங்காவை உருவாக்க, உ.பி., அரசு முடிவு செய்தது. அதன்படி, 5.86 கோடி ரூபாய் செலவில், குர்ஜாவில், 2 ஏக்கர் பரப்பளவில், வித்தியாசமான உலகம் என பொருள்படும், 'அனோகி துனியா' என்ற பெயரில், பீங்கான் பொருட்களால் உருவான உலகின் முதல் பூ ங்கா, இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. இந் த பூங்காவில், உடைந்த குடங்கள், கோப்பைகள், இருக்கைகள், செயற்கை மரங்கள் போன்றவை பீங்கான் கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆறு கலைஞர்கள், 120 கைவினைஞர்களை கொண்ட குழு, பூங்காவில் தனித்துவமான, 100 கலைப்படைப்புகளை உருவாக்கி உள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், 'செல்பி' புகைப்படம் எடுக்கும் இடம், உணவகங்கள், பசுமையான நிலப்பரப்பு உள்ளிட்டவை உள்ளன. இது குறித்து, புலந்த்ஷாஹர் -- குர்ஜா மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அங்கூர் லத்தார் கூறுகையில், ''குர்ஜாவில் ஆண்டுதோறும் டன் கணக்கில் பீங்கான் கழிவுகள் வீணாகின்றன. இதை பயனுள்ள முறையில் பயன்படுத்தி, அரசு - தனியார் துறை ஒத்துழைப்பில், பீங்கான் கழிவுகளில் இருந்து பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. ''இது இம்மாத இறுதியில் திறக்கப்படும். இந்த பூங்கா, குர்ஜாவின் வளமான கைவினைத்திறனை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, கழிவுகளை ஆக்கப்பூர்வமான, செயல்பாட்டுக் கலையாக மாற்றுவதன் மூலம் நிலையான வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது,'' என்றார்.