உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு கூடாது: அஜித் தோவல்

பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு கூடாது: அஜித் தோவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது,'' என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக கடந்த 2001 ம் ஆண்டு சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின. ஆரம்பத்தில், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது, தொடர்ந்து வர்த்தகம், எரிசக்தி மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகிய கொள்கைகளும் இணைக்கப்பட்டன.இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017 ம் ஆண்டில் இந் அமைப்பில் முழு நேர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டன.சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த இந்த அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் அஜித் தோவல் பேசியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள், நிதியுதவி அளிப்பவர்கள், உதவுபவர்களை பொறுப்பாளர்களாக ஆக்கவேண்டும். பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை தடுக்க இணைந்து செயல்பட வேண்டும்.ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு, ஜெய்ஷ் இ முகம்மது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் கவலை அளிக்கின்றன.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத உள்கட்டமைப்புகளை முறியடிக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை கட்டுப்பாட்டுடன், பதற்றத்தை தூண்டாத வகையில் செயல்படுத்தப்பட்டது.பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாடுகளை எடுக்கக்கூடாது. லஷ்கர், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகள் மற்றும் ஆதரவான சூழ்நிலைகளை அழிக்க வேண்டும். எல்லை தாண்டியது உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

துணை அதிபருடன் சந்திப்பு

இந்த மாநாட்டை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன துணை அதிபர் ஹன் ஜெங்க் மற்றும் அந்நாட்டின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க்யீயையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூன் 25, 2025 03:54

ஆக்கிரமிப்பு மற்றும் அடுத்தவர் நிலத்தை ஆட்டையை போடுதல் போன்ற கேவலங்களையும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கலாம்..


திகழ் ஓவியன்
ஜூன் 25, 2025 08:52

அத உங்க ராவுள விட்டு செல்ல சொல்லு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை